ஒரு இந்துநூல் என மதுரை பொற்றாமரை குளத்தில் நிரூபிக்கபட்டது

ஆளாளுக்கு திருகுறள் பற்றி பேசுகின்றார்களே தவிர, அது அன்றே ஒரு இந்துநூல் என மதுரை பொற்றாமரை குளத்தில் நிரூபிக்கபட்டது என சொல்வார் யாருமில்லை

ஒரு மோதலில் மதுரை பொற்றாமரை குளத்தில் திருகுறள் காட்டிய அதிசயங்கள் சில உண்டு என்கின்றன தமிழ் பண்டைய செய்திகள்

அன்று ஒரு தமிழ்படைப்பு அங்கீகாரம் பெற மதுரை தமிழ்சங்கத்தில் அது மேடை ஏற்றபட வேண்டும், அந்த சங்கம் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்தது

குறளை இலக்கிய வகையில் ஏற்கமுடியாது என சங்கம் வாதிட்டு அது குளத்தில் எறியபட்டதாகவும் தெய்வமே அதை மீட்டு சங்கபலகைக்கு கொண்டு வந்ததாகவும் பழந்தமிழ் குறிப்புகள் சொல்லும்

மதுரை ஆலயத்தில் திருகுறள் வைக்கபட்டபொழுது பல ஆச்சரிய நிகழ்வுகள் நிகழ்ந்ந்ததாகவும் அதை பாடலாக பாடி வைத்ததாகவும் தமிழ் இலக்கியத்தில் செய்திகள் உண்டு..

அதன் பின் குறளை சிறப்பித்து பாட அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். சங்கப் புலவர்கள் ஆளுக்கொரு பாடலைப் பாடி நூலைச் சிறப்பித்தனர்.

அசரீரியாக – ஆகாயவாணியாக – ஒரு பாடல் மலர்ந்தது.

இடைக்காடர் மற்றும் ஔவை ஆகியோர் ஆளுக்கொரு பாடல் தர மொத்தம் 55 பாடல்கள் ஆயின. இது திருவள்ளுவ மாலை என்ற சிறப்புப் பெயர் பெற்று இன்றும் இலங்குகிறது.

இந்த 55 பாடல்களில் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாரும் ஒருவர். அவர் கீழ்க்கண்ட வெண்பாவைப் பாடினார் :

“புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல் சிலவர் புலவர் எனச் செப்பல் – நிலவு பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்குஇருள் மாலைக்கும் பெயர்”

அருமையான இந்தப் பாடலை அளித்த தமிழாசிரியர் கிழார் வாழ்ந்த செங்குன்றூர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஊர் என்று அவரைச் சிறப்பித்து கொங்கு மண்டல சதகம் 28ஆம் பாடல் கூறுகிறது:

பாடல் இதோ:

“நிலவுல கத்திற் பலகலை தேர்ந்த நிபுணருளே புலவர் திருவள் ளுவரென நேயம் பொருந்தவுரை குலவு மதுரைத் தமிழா சிரியர்செங் குன்றூர்கிழார் வலிமை யுறவரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே”

பாடலின் பொருள் : பூவுலகத்தில் பல கலைஞானங்களில் சிறந்த புலவர், திருவள்ளுவர் என்று கூறிய மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாருங் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே என்பதாம்.

திருவள்ளுவ மாலையில் உள்ள அசரீரி கூறிய பாடல் இது:

“திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க உருத்திர சன்மர் என உரைத்து வானில் ஒருக்கஓ என்றதுஓர் சொல்”

கலைமகள் திருக்குறளைப் புகழ்ந்து பாடிய பாடல் இது:

“நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு”

இறையனார் திருக்குறளைப் புகழ்ந்து ஈந்த பாடல் இது:

“என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் நின்றலர்ந்து
தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்”

ஆம் அன்றே அது இந்துநூல் என நிரூபிக்கபட்டு வழக்கு முடிந்துவைக்கபட்டது,

ஒரு பயலாவது அதுபற்றி சொல்வான் என எதிர்பார்த்தால் சொல்லவே இல்லை

டிவி மீடியாவுக்கு செல்லும் பாஜக கோஷ்டியும் அதுபற்றி பேசவே இல்லை, தாமரை முதலில் மதுரை பொற்றாமரை குளத்தில் இருந்து மலரட்டும்