திமுக எனும் தமிழ் கட்சி தலமைக்கான தமிழ்
கவனியுங்கள், அவ்வளவு ஆங்கிலம் கலந்த தமிழ், திமுக எனும் தமிழ் கட்சி தலமைக்கான தமிழ் இது அல்ல, பார்ப்போர் நகைப்பர்.
திமுகவின் முந்தைய இரு தலைவர்களும் தமிழில் மிக சரியாக இருந்தார்கள், ஒவ்வொரு வார்த்தையிலும். முழு தமிழிலும் தவிர்க்கமுடியா இடத்தில் ஆங்கிலத்தில் சொல்லி தமிழிலும் சொல்லும் நுட்பம் அவர்களிடம் இருந்தது
அவ்வளவு கவனமாக இருந்தது அந்த இரு தலமையும், ஏனென்றால் தமிழ் தமிழ் என சொல்லி வளர்ந்த இயக்கம் அது..
பொதுவாக திமுக தலமைகளின் ஸ்பெஷாலிட்டியே சுவாரஸ்ய பேச்சும் அழகான தமிழும்.
அந்த இரு தலமையும் அதில் பேச்சிலும் எழுத்திலும் அப்படி ஜொலித்தது
தமிழ் மிக அழகாய் வருமாரும் பார்த்துகொண்டது, அவர்களின் மூலதனமே அது அல்லவா?
இங்கு மா.பா பாண்டியராஜனுக்கு மிசாவில் பதில் சொல்வதாக நினைத்து தன் பலவீனங்களை பட்டியலிடுகின்றார் ஸ்டாலின்
தமிழ் வளர்க்க வந்த கட்சியின் தலைவர் இப்படி ஆங்கில கலப்புடன் உளறுவது நிச்சயம் சரி அல்ல
அதுவும் வார்த்தைகளை கவனியுங்கள் “போலிசு அலோவ் பண்ண மாட்டேங்குறான்”
ஆக எடப்பாடி வலையில் அட்டகாசமாக விழுந்துவிட்டார் அன்னார், பரிதாபம்
https://m.facebook.com/story.php?story_fbid=517682779072811&id=100024932807586