தலைநகர் டெல்லிக்கு இது மகா சோதனையான காலம்
தலைநகர் டெல்லிக்கு இது மகா சோதனையான காலம்
ஒரு பக்கம் கடும் காற்று மாசு, மறுபக்கம் காவலர் வக்கீல் போராட்டம் என ஏகப்பட்ட சிக்கல்
பொதுவாக தலைநகரம் நாட்டின் முகம், உலகத்தார் அதன் வழியாவே நாட்டை பார்ப்பார்கள்
ஏராளமான நாட்டு தூதரகம் அங்கு இருக்கின்றது ஏராளமான பன்னாட்டு ராஜ தந்திரிகள் இருக்கின்றார்கள் , அவர்கள் முன்னாள் தலை நகரம் இப்படி காட்சி அளிப்பது வேதனை
இந்தியாவின் தலைநகராக முதலில் கல்கத்தா இருந்தது பின்புதான் வெள்ளையன் டெல்லிக்கு மாற்றினான்
இப்பொழுதும் இந்திய தலைநகர் மாற்ற வேண்டிய நேரம் போலவே தெரிகின்றது
அல்லது குறைந்த பட்சம் நிர்வாக தலைநகர் என ஓன்று மகா நவீனமாக உருவாக்கப்பட வேண்டும்
பல நாடுககளை சுற்றி வரும் மோடி அதற்குத்தான் அப்படி ஒரு குரல் வரத்தான் அமைதியாக இருப்பாரோ என்னமோ
சரி புதிய நகரை எங்கு நிர்மானிப்பார்கள்?
மாமல்லபுர பகுதி , அழகான பகுதி என சீன அதிபரே சொன்னாராம்
இரு தலை நகரம் ஒரு நாட்டுக்கு இருக்க கூடாதா என்ன?
ஒரு சிறந்த இந்திய நிர்வாக நகரை தமிழ்நாட்டில் நிர்மாணிக்கத்தான் செய்யலாம், அப்படி செய்தால் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் நல்லது.