ஆட்குறைப்பு ஒன்றும் அதிசயம் அல்ல
CTS , Infosys ஆகிய நிறுவனங்கள் செய்திருக்கும் ஆட்குறைப்பு ஒன்றும் அதிசயம் அல்ல, அவர்கள் அப்படித்தான்
முதலாளித்துவ கார்ப்பரேட் உலகில் எல்லாமே அப்படித்தான்,
“எனக்கு தேவை என்றால் வா, வேலை செய் சம்பளம் வாங்கு , எனக்கு தேவை இல்லை என்றால் கிளம்பு உன்னை பற்றி எனக்கு என்ன கவலை ..”என்பதுதான் அந்த சித்தாந்தம்
நாம் நேற்று ரஷ்யா புரட்சி பதிவில் சொல்லியிருந்தது இதுதான்
அன்று ஆலை முதல் சுரங்கம் வரை இப்படித்தான் நிலை இருந்தது, தேவை என்றால் வா என்பார்கள் தேவை முடிந்ததும் விரட்டி அடிப்பார்கள்
ரஷ்யாவில் தொழிலாளர் அரசு அமைந்து அதை போல தங்கள் நாட்டிலும் நடந்து விடுவமோ என அஞ்சிய அரசுகள் அவசரமாக சலுகைகள் வழங்கின
தொழில்சங்கம் எல்லாம் உருவாகி தொழிலாளர் பாதுகாப்பு பனி பாதுகாப்பு ஓய்வுத்தொகை எல்லாம் அப்படி வந்ததுதான்
இன்று ஆட்டோ ஓட்டுநர் கொத்தனார் சித்தாளுக்கு உள்ள பாதுமாகு ஐடி தொழிலாளிக்கு இல்லை
ஆம் அதிகம் படித்தவன் நிலை அப்படிதான், அதிகம் படித்துவிட்டால் ஒருவன் தன்னை பற்றி மட்டுமே யோசிப்பான் போல
என்னதான் தொழில்நுட்ப உலகம் வந்தாலும் தொழிலாளர் உரிமையினை தொழிசங்கமே தான் காக்க முடியும் என்பது தெரிகின்றது
ஆனால் ஐடி தொழிலில் அது எல்லாம் சாத்தியமில்லை, இந்த அவலம் நிற்கப்போவதுமில்லை
இதுவே ஒரு தொழிற்சாலையாய் இருந்து , அங்கு இதனை ஆயிரம் பேர் நீக்கப்பட்டால் ஒருவான் வேலைக்கு செல்வான் என நினைக்கின்றிர்கள்? விட மாட்டார்கள்.
அவனுக்குத்தானே வேலை போனது நமக்கு என எனும் சுயநலம் அவர்களிடம் இருக்காது.
படிக்காத தொழிலாளிக்கு இருக்கும் பொதுநல உணர்வு படித்த ஐடி பணியாளனுக்கு இருக்காது என்பதுதான் உண்மை
ஒரு ஆட்டோக்காரனை அடித்துவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் , ஆனால் ஐடிகாரனை ஊற போட்டு அடித்ததாலும் ஒரு பயலும் கேட்க மாட்டான், ஏன் கூட வேலை செய்பவனே கேட்க மாடடான், அவன் தலைவிதி அப்படி