அந்த சர் சி.வி. ராமனின் தத்துவம் இன்னும் ஆழமாக செல்லும்
அந்த சர் சி.வி. ராமனின் தத்துவம் இன்னும் ஆழமாக செல்லும், சூரியனின் 7 குதிரைகள் என்பது 7 வண்ணம், ராமனும் கண்ணனும் நீலம் என சொன்னது நீல நிறம் அதிகம் சிதறடிக்கப்படுவதால்
இதனால் வானமும் கடலும் நீல நிறமாய் தொந்தோன்றுவதால் என்பதோடு நிற்காது
7 வண்ணங்களுக்கும் ஒரு சக்தி உண்டு, அவை மானிடரை பாதிக்கும், அவற்றின் நல்ல சக்தியினை பெற காலை நேரம் உகந்தது, அவற்றை விலகி வைக்க கிரகண நேரமும் இன்னும் உச்சி நேரமும் உகந்தது
வானில் மற்ற கிரக அமைப்புகள் பொறுத்து பூமியில் அந்த ஒளிக்கதிர் பல விளைவுகளை கொடுக்கும், என்றெல்லாம் வரும்
அதாவது சூரிய நமஸ்காரம் முதல் கிரகணம் வரை, ஒவ்வொரு வகையான நிறத்தை இந்துமதம் குறிப்பிட்டு சொல்வது வரை ஏகப்பட்ட விஞ்ஞான விஷ்யங்கள் உண்டு
சர் சி.வி.ராமன் அதில் ஒரு தொடக்க புள்ளியினைத்தான் சொன்னார், இன்னும் அதில் சொல்லப்படா விஷயங்கள் ஏராளம் உண்டு
அதை இந்துமதத்தையும் விஞ்ஞானத்தையும் சரியாய் உணரும் இன்னும் பலர் வந்து வருங்காலத்தில் நிரூபிப்பார்கள் , பெரும் பரிசுகள் பெறுவார்கள்
அதில் இந்துமத மென்மையும் அதன் அறிவார்ந்த தன்மையும் குன்றின் மேல் விளக்காக ஜொலித்து கொன்டே இருக்கும்