கமலஹாசனின் தந்தையார் சீனிவாசன் சிலை சொந்த ஊரில் திறப்பு

கமலஹாசனின் தந்தையார் சீனிவாசன் சிலை சொந்த ஊரில் திறப்புகமலாஹாசனின் தாயார் பெயர் ராஜலெட்சுமி, இந்த தசவாதாரம் படத்த்து தலைப்பு பாடலில் மிக பொருத்தமாக இந்த பெயர்களை சொன்னார் வாலி”ராஜலட்சுமி நாயகன் சீனிவான்தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்னுதாசன் தான்”இத்தோடு முடித்தால் அவர் என்ன வாலி, அவர் வைணவர் அல்லவா? தஞ்சை கோவிலும் சோழனும் சைவம் அல்லவா?அதனால் அடுத்தவரி இப்படி சொல்வார்”நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்”அதாவது ரங்கராஜன் என்பது வைணவ கடவுளையும் குறிக்கும் அதே நேரம் வாலியின் சொந்த பெயரும் அதுதான்..பாடல் தொடரும் “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது..” அது கமலஹாசனின் நாத்திகத்துக்கு செவிட்டில் அடிப்பது போன்ற வரி..நிச்சயம் அற்புதமான கவிஞன் வாலி, இந்த சிலை திறக்கபடும் பொழுது அவரின் சுவாரஸ்யமான‌ வரிகள் நினைவுக்கு வருகின்றன..