இதையெல்லாம் பராசக்தி காலத்திலே பார்த்துவிட்டோம்

திமுகவுக்கும் டெல்லிக்கும் கடும் போர் நடக்கும் காலமெல்லாம் அதாவது டெல்லி பிரநிதிகள் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுதெல்லாம் இந்த உதயநிதியின் தாத்தா கருணாநிதி இப்படித்தான் எழுதுவார்

“நாம் பண்பாடு மிக்கோர் அதனால் அவர்கள் மேல் முட்டை எறியாதீர்கள், அய்யகோ நாம் நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர் அதனால் அழுகிய தக்காளியினை எறியாதீர்கள். உங்களை கெஞ்சி கேட்கின்றேன் தயவு செய்து கற்களை மட்டும் எறியாதீர்கள்..”

இப்படியாக உருக்கமாக எறியாதீர் எறியாதீர் என்பதிலே தொண்டனுக்கு புரியும், அவன் மேற்கண்ட ஆயுதங்களோடு களமிறங்குவான், அசம்பாவிதம் நடக்கும்

அதன்பின் இது தொண்டர்களின் மனக்காயம், தமிழினத்தின் பெருங்கோபம் இனியாவது டெல்லி எம்மை புரியட்டும் என சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்துகொள்வார்

அவரின் பேரனுக்கும் அந்த நுட்பம் வராதா என்ன?

ஸ்டாலினை விட உதயநிதி பரவாயில்லை போல் தெரிகின்றது.

அட போங்க உதய்சார் , இதையெல்லாம் பராசக்தி காலத்திலே பார்த்துவிட்டோம்