ஆப்பரேஷன் கக்டஸ்

சில தினங்களுக்கு முன்பு மாலத்தீவு முன்னாள் அதிபர் 1988ல் இந்தியா செய்த உதவிக்கு நன்றி, 31 ஆண்டுகளுக்கு முன்பு அந்நாடு செய்த நன்றியினை நினைத்துபார்க்கின்றேன் என சொல்லியிருப்பதை உங்களில் சிலர் கவனித்திருக்கலாம்

அது என்ன நன்றிகடன் என்பது வரலாற்றில் இருக்கின்றது, நாமும் பல இடங்களில் சொன்னோம், இப்பொழுதும் ஒருமுறை சொல்லிவிடலாம் தெரியாதோர் தெரிந்து கொள்க‌

அதாவது 1980களில் இந்தியா குறிவைத்த நாடுகள் பாகிஸ்தான், சீனா, இலங்கை மட்டுமல்ல மாலத்தீவு மேலும் இந்தியாவுக்கு குறி இருந்தது, இலங்கையில் கால்பதிக்க நினைக்கும் பாகிஸ்தான் மாலத்தீவில் இருந்து இந்தியாவுக்கு தொல்லைகொடுக்கும் அது இஸ்லாமிய நாடு வேறு என சந்தேக கண் கொண்டது இந்தியா

இலங்கையில் இனகலவரத்தை காட்டி போராளிகளை இறக்கி அவர்கள்மூலம் நுழைந்த இந்தியாவுக்கு மாலதீவில் நுழைய காரணம் சிக்கவில்லை, காரணம் சிக்குவதாகவும் தெரியவில்லை, அதனால் என்ன? நாமே காரணத்தை உருவாக்கலாம் என திட்டமிட்டது இந்தியா

இந்திரா காந்தி இல்லாமல் ராஜிவ் வந்து இலங்கைக்கு அமைதிபடை எல்லாம் அனுப்பி குழப்பியிருந்த நேரம் அது. வரலாற்றில் இந்திராவும் கருணாநிதியும் ஒரு ரகம்,. ராஜிவும் முக ஸ்டாலினும் இன்னொரு ரகம்

அந்த ராஜிவ் இலங்கையில் மட்டுமல்ல மாலத்தீவிலும் குழப்பினார்

ஆம் மாலத்தீவுக்கு ஒரு சிக்கலை உருவாக்கி அதை இந்தியா தீர்த்துவைப்பது போல ஒரு ஆட்டம் ஆட திட்டமிட்டது இந்திய உளவுதுறை, அதற்கு அவர்கள் பிடித்த நபர் ஈழபோராளி உமா மகேஸ்வரன், பிளோட் எனப்படும் குழுவின் தலைவர்

ஈழத்தில் இந்தியா பயிற்சி கொடுத்த குழுக்களில் அதுவும் ஒன்று, உமா மகேஸ்வரன் கில்லாடிக்கும் கில்லாடி , பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்று ஈழத்தில் முதன் முதலில் ஆயுதம் தூக்கி அலறவைத்தது அவர்தான், அவரும் பிரபாகரனும் ஒன்றாகத்தான் முதலில் இருந்தார்கள்

பின் ஊர்மிளா எனும் காரியதரிசியினை உமா மகேஸ்வரன் காதல் செய்தார் , இன்னும் என்னெவெல்லாமோ செய்து கல்யாணமும் செய்தார், பிரபாகரன் அதை ஏற்கவில்லை இருவரும் பிரிந்தார்கள்

இவ்வளவுக்கும் கொழும்பில் பல கொலைகளை செய்தது இந்த இருவருமே, 1970களின் கடைசி காலமது

அப்படி பெண்ணின் காதலை கண்டித்து பிரிந்த பிரபாகரன், பின் மதிவதனையினை காதல் திருமணம் செய்த பொழுது அவன் ஒரு கள்ளப்பயப்பா என சொல்லிகொண்டிருந்தார் உமா

உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் கடைசியாக சந்தித்த இடம் சென்னை பாண்டிபஜார், இருவரும் சுட்டுகொண்டார்கள், சுட தெரியாமல் சுட்டார்கள் இருவருக்குமே காயமில்லை, இருவரும் இந்திய அரசால் பிடிபட்டு பின் சிங்களனிடமிருந்து காப்பாற்றபட்டார்கள்

அந்த உமா மகேஸ்வரனின் சூராதி சூரம் நிறைய உண்டு, இலங்கை சிறையினை உடைத்து கைதிகளை மீட்ட வீர சாகசம், இலங்கை படைகளை ஓடவிட்ட வீரம் என நிறைய உண்டு

இந்தியா 1984ல் பயிற்சி கொடுத்த இயக்கத்தில் பிளாட்டும் உண்டு

உமா மகேஸ்வரன் அசாத்திய ஆசாமி, பிரபாகரன் எல்லாம் அவரிடம் நிற்க முடியாது. அவ்வளவு பெரும் கில்லாடி ஆனால் பிரபாகரனுக்கு ஒத்துழைத்த விதி அவருக்கு ஒத்துழைக்கவில்லை

ஈழத்தில் அராபத்திடம் பயிற்சி பெற்ற உமா மகேஸ்வரன், பத்மநாபாவினை ஒழிக்க புலிகளுடன் சி.ஐ.ஏ மொசாத் கைகோர்த்ததுதான் பிரபாகரனின் நல்ல நேரம்

இதெல்லாம் பெரும் சம்பவங்கள், சென்றால் எழுதி தீராது நாம் மாலதீவுக்கு வரலாம்

ஓரளவு நல்ல இயக்கம், வீரமான இயக்கம் என மாலத்தீவு ஆப்பரேஷனுக்கு அவர் குழுவினை தேர்ந்தெடுத்தது இந்தியா

விஷயம் ஒன்றுமல்ல அண்ணாநகர் முதல் தெரு படத்தில் காட்சி வரும் அல்லவா? ஜனகராஜ் திருடனாக செல்லவேண்டும் சத்யராஜ் அவரை திருடனாக விரட்டி பெயர் பெறவேண்டும் , அதே காட்சிதான் மாலதீவிலும் நடக்க இந்தியா திட்டமிட்டது

பிளாட் உறுப்பினர்கள் ஏராளமானோர் சுற்றுலா விசாவில் மாலதீவில் போய் பதுங்கினர், 1988ல் பிளாட் படையினர் 80 பேர் படகுகளில் ஆயுதம் சகிதம் மாலத்தீவு கடற்கரையில் இறங்கினர், பதுங்கியோரும் வந்தோரும் இணைந்து கொள்ள சண்டை தொடங்கிற்று

1988 நவம்பர் 1ம்தேதி மாலதீவில் கிளர்ச்சி, மர்மபடை தாக்குதல் என செய்திகள் வர ஆரம்பித்தன‌

மாலத்தீவில் கொட்டாம்பட்டி காவல் நிலையம் போல பெயருக்கு ஒரு ராணுவம் உண்டு அது இதனை எதிர்பார்க்கவில்லை, கடும் சண்டை தொடங்கியதில் புளோட் அட்டகாசமாக முன்னேறியது

அவர்கள் முகத்தை மறைத்தபடி ஏதோ தீவிரவாத இயக்கம் போல சண்டையிட்டனர், விமான நிலையம், தொலைகாட்சி நிலையம் என எல்லாம் வேகமாக இவர்கள் கட்டுபாட்டில் வந்தது, ஆனால் மகா முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டார்கள்

ஆம் மாலத்தீவு ஜனாதிபதி மாளிகை, அரச இடங்களை விட்டுவிட்டு வெளியே ஆடிகொண்டிருந்ததில் மாலத்தீவு அதிபர் ஜையூம் ஒப்பாரி தொடங்கிவிட்டார்

“ஏ அமெரிக்காவே, ஏ பிரிட்டனே ஏ இந்தியாவே ஏ பாகிஸ்தானே எங்கள் நாட்டை யாரோ கைபற்றி எம்மை கொல்ல பார்கின்றார்கள், வந்து காப்பாற்றுங்கள்..”

இந்தியா இதனை எதிர்பார்த்தது ஆனால் இப்படி சொதப்பும் என எதிர்பார்க்கவில்லை,

போராளிகள் இந்த மாலத்தீவு அதிபரை தலையில் துப்பாக்கி வைத்து அமர்த்தியிருப்பார்கள், பேச்சு வார்த்தை நடக்கும் வாய்ப்பில் நாம் உள்ளே சென்றால் போதும் என அது எதிர்பார்த்திருந்தது

ஆனால் விஷயம் சீரியசாக அமெரிக்கா உள்ளே ஓடிவர வாய்பிருந்தது, பாகிஸ்தான் களமிறங்க வாய்ப்பு இருந்தது. அப்படி அவர்கள் வந்து போராளிகளை பிடித்து விசாரித்தால் இந்திய திட்டம் சந்தி சிரித்துவிடும் ஆபத்து இருந்தது

உண்மையில் இந்தியா குறித்து கொடுத்த திட்டம் வேறு, அட சிங்கள ராணுவத்தையே சமாளிக்கும் நாம் மாலத்தீவினை விடுவோமா என் புளோட் அசால்ட்டாய் இருந்தது இன்னொரு மகா முக்கிய குழப்பம் இந்தியா சரியான நேரத்தை அறிவிக்கும் முன்பே புளோட் பாய்ந்தது

ஆக எல்லாம் குழம்பி காரியம் கெட்டது

ஆனால் விட்டுவிட முடியுமா, மாலத்தீவில் கிளர்ச்சி ஏற்பட்டதாகவும் அதை அடக்க தன் படையினை அனுப்புவதாகவும் சொல்லி “ஆப்ரேஷன் கக்டஸ்” என பெயரிட்டு தன் படைபிரிவினை விமானத்தில் அனுப்பியது கப்பலும் விரைந்தது

(அட எல்லாம் தயாராக முன் கூட்டியே இருந்ததுதானே, பின் என்ன?)

இது இந்தியாவின் இரண்டாம் கடல் தாண்டிய அந்நிய தலையீடு, முதலில் 1979ல் கொழும்பு கம்யூனிச கிளர்ச்சியினை இந்தியா சென்று முறியடித்தது, ஆனால் அதில் இன்னும் சில நாடுகளும் வந்தன‌

போர்காலம் அல்லாமல் முழுக்க முழுக்க இந்தியா களமிறங்கிய இந்தியாவின் முதல் அந்நிய நாட்டு நடவடிக்கை இதுதான்

இந்திய படைகள் போய் ஈழபோராளிகளை இந்த ஜனகராஜை சத்யராஜ் பிடித்தது போல் பிடித்தன, கொஞ்ச பேர் நம்ம இந்தியாதானே என பார்த்துகொண்டிருந்தார்கள்

ஆனால் உமா மகேஸ்வரன் கடும் அப்செட்டானார், காரணம் இந்திய உளவுதுறை அவரை என்ன சொல்லி அழைத்துவந்தது என்றால் அங்கே குழப்பம் வந்ததும் நாம் காப்பாற்ற வருவதாக சொல்லி முகாம் அமைப்போம், அதில் உமக்கும் இடம் தருவோம் இங்கிருந்தும் நீர் போராடலாம், உங்களுக்கு இன்னொருதளம் தரத்தான் இந்த ஏற்பாடு

உமா மகேஸ்வரன் அதை நம்பினார் களமிறங்கினார், ஆனால் காரியம் சொதப்பியதும் இந்தியா இல்லை இல்லை இனி நடக்காது உடனே கிளம்பு என அவரை விரட்டியது

கடும் அதிர்ச்சியில் இருந்த உமா மகேஸ்வரன் சில மாலதீவு முக்கிய புள்ளிகளை ஒரு கப்பலில் அள்ளிபோட்டு கிளம்ப சொன்னார், இந்தியா அதை ரசிக்கவில்லை. ஆனால் கடும் ஆசாமியான மகேஸ்வரன் கப்பலை இலங்கை நோக்கி கிளப்பினார்

இது பெரும் சிக்கலாகும் என கருதிய இந்தியா, அக்கப்பலை நடுகடலில் தடுத்து பயணிகளை மீட்டது

ஆத்திரத்திலும் அவமானத்திலும் உமா மகேஸ்வரன் இப்படி சொன்னார் “ராஜிவ்காந்தியினை பழிவாங்காமல் விடமாட்டேன்”

தன்னை களத்தில் இறக்கி கைவிட்டு தன்னை அடியாளாக மாற்ற நினைத்த இந்தியாமேல் கடும் ஆத்திரத்தில் இருந்த உமா அதன்பின் இந்திய எதிர்ப்பில் இருந்தார், வங்கம் தந்த பாடம் என இந்தியா வங்கதேசத்தில் செய்த செயலையும், முஜிபுர் ரகுமான் கொலையினையும் எடுத்து பேச ஆரம்பித்தார்

ஒரு கட்டத்தில் ராஜிவ் குழந்தைகளை கடத்த திட்டமிட்டார், அது அதிகாரபூர்வ செய்தி இல்லை என்றாலும் உளவுதுறை அந்த எச்சரிப்பை செய்தது “ராகுலும் பிரியங்காவும்” கடும் காவலுக்குள் வந்தனர்

ராஜிவ் உயிருக்கு முதலில் குறிவைத்தது உமா மகேஸ்வரனே, ஆனால் விதி சிங்கள கடற்படை வீரன், உமா மகேஸ்வரனையும் தாண்டி பிரபாகரனிடம் ராஜிவினை ஒப்படைத்தது

பின் உமா மகேஸ்வரன் இலங்கையில் கொல்லபட்டார். அது இந்திய வேலையா புலிகள் வேலையா என கடைசிவரை தெரியவில்லை

அந்த மாலதீவு நடவடிக்கை (அல்லது நாடகம்) நடந்து 31 ஆண்டுகள் ஆயின, அதைதான் அன்றைய அதிபரும் இன்னாள் முன்னாள் அதிபரான கையூம் நன்றியோடு தெரிவித்தார்

இந்திய உளவுதுறையின் மிகபெரும் சொதப்பல் அது என்பது குறிப்பிடதக்கது, எனினும் ஆமாம் நாங்கள்தான் செய்தோம் இன்னொரு நாட்டுக்கு நீங்கள் இடம் கொடுத்தால் இதுதான் நடக்கும் என எச்சரித்தது இந்தியா

இச்சம்பவத்துக்கு பின் இந்தியபிடி மாலத்தீவில் அதிகரித்தது, இதுவரை இதுபற்றி பேசாத மால்தீவு முன்னாள் அதிபரை பேசவைத்து இந்நாளைய இந்தியா ஏதோ உலகுக்கு சொல்கின்றது என்பது மட்டும் புரிகின்றது

ஆப்பரேஷன் கக்டஸ் என்பது ஜனகராஜ் சதியராஜ் அல்லது உள்ளத்தை அள்ளித்தா படங்களின் சிரிப்பு காட்சிதான், இந்திய உளவுதுறையும் ராஜிவும் அப்படி சொதப்பி வைத்திருந்தார்கள்

ஆனால் அதன் பின் நடந்த சம்பவங்கள் ஏராளம்