ஏதோ சொல்லவருகின்றார் மய்யத்து தலைவர்

கமல் குடும்ப விழாவில் பூஜாகுமார் கலந்துகொண்டார் என்கின்றது செய்தி ஆக தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு ஏதோ சொல்லவருகின்றார் மய்யத்து தலைவர்

சரிகாவினை திருமணம் செய்தபொழுது வாழ்த்து வாங்க சிவாஜியிடம் சென்றார் கமலஹாசன், அப்பொழுது சிவாஜி இப்படி சொன்னார் என்றன செய்திகள்

“அய்யா ராசா.. நல்லா இருப்பா நல்லா இரு. ஆனா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு இந்த பக்கம் வராதேப்பா… அம்புட்டுதான் சொல்லுவேன்”

அதையே வாணிகணபதி எனும் கமலின் முதல் மனைவி இப்படி சொன்னார், அதாவது சிம்ரனோடு கமலஹாசன் கிசுகிசுக்கபட்ட காலங்களில் இப்படி சொன்னார்

“பாவம் அந்த புதுபெண், அவருக்காக பரிதாபடுகின்றேன்”

நாமும் இந்த பூஜாகுமாருக்காக பரிதாபடாமல் என்ன செய்யமுடியும்?

கமலஹாசனுக்காக அன்றே மன்மத லீலையில் பாடல் எழுதினார் கண்ணதாசன்

“ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
ஆதவன் வாரிசு வெண்ணிலவு
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்”