தேசத்துக்கான கிகிச்சை நடந்த நாள்

கறுப்பு பண ஒழிப்பு என ஆளாளுக்கு பலர் விமர்சித்தாலும் அதன் பின்புதான் இந்நாட்டின் உண்மையான பொருளாதாரம் விளங்க தொடங்கிற்று

வெற்று பிம்பத்திலும் ஊதிபெருக்கபட்ட பொருளாதார தோற்றத்திலும் இருந்த மாயையில் இருந்த இந்தியாவினை இந்நாளே தோலுரித்து காட்டிற்று

இந்த நாளுக்கு முன்புவரை வங்கிகளின் உண்மை நிலை தெரியாது, பொருளாதார தூண்களான பெரும் முதலைகளின் உண்மை நிலை தெரியாது

யாருக்கு எவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது எனவும் தெரியாது, தொண்டு நிறுவணங்களின் முண்டுக்குள் இருந்த பணம் தெரியாது

கருப்பு பண ஒழிப்பு என பெரும் நடவடிக்கை எடுக்கபட்டபின்பே சாயம் வெளுத்தது, பல நாகங்கள் பொந்திலிருந்து எழும்பின, பல நரிகள் வளையிலிருந்து ஓடின‌

உண்மை நிலை மக்களுக்கு விளங்கிற்று

இந்த நடவடிக்கைக்கு பின்பே விஜய் மல்லையா முதல் நீரவ் மோடி வரை சிக்கினர், ஏன் முகேஷ் அம்பானியே தடுமாறினார்

வங்கிகள் தங்களின் உண்மை நிலையினை ஒப்புகொண்டன‌

இந்நாளுக்கு பின்பே தேசவிரோத சக்திகளின் பணம் முடக்கபட்டு நாட்டில் வீண் குழப்பமும் இதர சர்சைகளுக்குமான மூலம் ஓடுங்கியது

காஷ்மீர் அமைதியானது இப்படியே, 370 சட்டம் ரத்து செய்யபட அதுதான் மூலம்

நம்புவீர்களோ இல்லையோ கருப்பு பண ஒழிப்புக்கு பின்பே தமிழகத்தில் கருப்பு பலூன் கோஷ்டிகள் அடங்கின, கருப்பு பலூனும் கொடியும் வாங்கும் மூலம் உடைக்கபட்டது.

நிச்சயம் நல்ல பணம் இழந்தேன் என ஒருவனும் சொல்லமுடியாது, வங்கியில் இருந்த என் பணம் களவாடபட்டது என ஒருவனும் சொல்லமுடியாது

உங்களிடம் இருக்கும் பணத்தை முறையாக்குங்கள் என அரசு சொன்னால் அது எப்படி தவறாகும்? முறையாக கணக்கு இருந்தால் ஏன் அஞ்ச வேண்டும்

சும்மா சொல்பவன் சொல்லிகொண்டே இருப்பான், இத்தேசத்தின் பல உண்மை நிலைகள் வெளிவந்த நாள். தேசத்தின் நோய்க்கு கசப்பு மருந்து கொடுத்த நாள்

நவம்பர் 8 கருப்பு பண ஒழிப்பு நாள் மட்டுமல்ல, தேசத்துக்கான கிகிச்சை நடந்த நாள், அதில் தேசம் மெல்ல குணமடைந்து நலமாகி வருகின்றது