ஒரு மிக உல்லாசமான தலைமுறை உருவாகிவிட்டது
ஒரு மிக உல்லாசமான தலைமுறை உருவாகிவிட்டது, இந்த தலைமுறைக்கு சுயநலமும் தன் நலமும் மட்டும் முக்கியம், நாட்டை பற்றி கொஞ்சமும் கவலை இல்லை
இந்நாடு சுதந்திர போராட்டத்தில் அவ்வளவு இழந்தது, ஒவ்வொரு தலைவனும் அவன் குடும்பமும் பொதுமக்களும் இழந்தது கொஞ்சமல்ல
சுதந்திரத்துக்கு பின்னும் எவ்வளவோ கஷ்டபட்டார்கள், ஆனால் நாடென்றால் அள்ளிகொடுத்தார்கள்
பாகிஸ்தான், சீனபோரில் ஒவ்வொரு குடும்பமும் கொடுத்தது கொஞ்சமல்ல, அரைவேளை உணவுக்கு வழியில்லா குடும்பமும் முடிந்ததை கொடுத்தது
வைகை அணை கட்ட ஊரையே காலி செய்த குடும்பங்கள் உண்டு, ஏன் சென்றார்கள்? நாட்டுக்காய் சென்றார்கள்
ஒவ்வொரு தியாகியினை செங்கலாய் கொண்டு கட்டபட்டிருக்கின்றது தேசம்
அந்த தேசத்தில் ஒரு நாள், அதுவும் ஒரே ஒரு நாள் கருப்பு பண ஒழிப்பு என சொல்லி முறைபடுத்தினார்கள்
அடடா, அதற்கு கால்கடுக்க நின்றோம், வரிசையில் நின்றோம் அப்படி இப்படி என ஏக அழுகுரல்
டாஸ்மாக் வாசலில் நிற்பவன் கணக்கென்ன? விஜய் படத்துக்கு வரிசை எவ்வளவு நீளம்?
நகைகடையிலும் இன்னும் பல கடைகளில் காட்டும் பொறுமை என்ன?
உல்லாச நிலையங்களின் கூட்டமென்ன? அட அத்திவரதருக்கு நின்ற வரிசை என்ன?
அந்த பொறுமையினை நாட்டுக்காய் ஒருநாள் காட்டமுடியாதா?
நின்றுவிட்டார்களாம், அது தாங்கமுடியாதாம்
எல்லையில் எப்பொழுது சாவுவரும் என தெரியாமல் நிற்கின்றான் ராணுவ வீரன், எப்பொழுது பிடிபடுவோம் என தெரியாமல் உளவு பார்க்கின்றான் உளவாளி
நாட்டுக்காய் ஒவ்வொருவனும் படும் பாடு என்ன?
கருப்பு பணத்தை ஒழித்து மோடி என்ன கொண்டு சென்றாரா? இல்லை ஆசை ஆசையாய் ராமருக்கு கோவில் கட்டினாரா?
நாடு ஒரு நல்ல திட்டத்தை அறிவித்தது, அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பது கடமை, அதை செய்யவுமா அழுகை ஒப்பாரி
நாளை பெரும் யுத்தம் ஒன்று வெடிக்குமாயின் இவர்கள் என்ன செய்வார்கள்? போராடத்தான் வேண்டும்
பாகிஸ்தானோ சீனாவோ மடியில் வைத்து சோறுபோடாது, ஊட்டிவிடாது சுருக்கமாக சொன்னால் எதிரியிடம் சிக்கினால் அடிமையிலும் கேவலமான நிலை வரும்
நாடும் பாதுகாப்பும் நல்வாழ்வும் அவ்வளவு முக்கியம், நாட்டுக்காய் எதையும் தாங்குபவனே நல்ல இந்தியன்
முறையாக பணம் வைத்திருந்தவன் ஒரு காசு கூட இழக்கவில்லை, யாரின் பணமும் உருவபடவில்லை , அதை ஒருவரும் எண்ணுவாரில்லை
மாறாக வீண் ஒப்பாரி கோஷ்டி எலலம் எம் பக்கம் வரவேண்டாம், உங்களுக்கு பதில் சொல்லும் எண்ணமுமில்லை
நாட்டுக்காய் சிறிய கஷ்டத்தை கூட தாங்காத இந்த சுயநல தலைமுறையினை எண்ணி நாம் வெட்கி தலைகுனிகின்றோம் , இவர்களால் நாட்டுக்கு ஒரு நல்லதும் நடக்காது என்பதை உறுதியாய் சொல்கின்றோம்
இந்த வெற்று பாரங்களால் ஆகவோவது ஒன்றுமில்லை, தேசம் அதை சுமையாக கஷ்டமாக கருதியிருந்தால் பாஜக இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?
ஆக இந்திய சகோதரர்கள் எம்முடனே இருக்கின்றனர், நாட்டுபற்றாளர் நம்முடனே இருக்கின்றனர், தேச விரோதிகளை விட நாட்டுபற்றுள்ளோர் அதிகம் எனும் ஆறுதலே நம்மை உற்சாகமாய் செயலாற்ற வைக்கின்றது