சீரியசாக பேசியும் சிரிக்க வைப்பது அங்கிள் சைமன்

சிரிக்க பேசி சிந்திக்க வைப்பது சிலர், சீரியசாக பேசியும் சிரிக்க வைப்பது வெகு சிலர். அதில் ஒருவர் அங்கிள் சைமன்

அவர் பேசுவதை கேட்டு சிரிப்பு மட்டும்தான் வரும் வேறேதும் தோன்றாது

“இடுக்கன் வருங்கால் நகுக..” என்பதை போல “சீமான் வருங்கால் நகுக..” என்ற அளவு ஆகிவிட்டது நிலை, சிரிப்புக்கு உத்தரவாதம்.

அன்னார் சொல்வதெல்லாம் பொய்தான், முக்கி கொண்டு கத்துவதால் முயல் புலியாகாது. உரக்க பேசுவதால் அவரின் பொய் உண்மை ஆகாது

அன்னார் நமக்கு பெரும் உதவி செய்திருக்கின்றார், அவரின் சகிக்க முடியா பொய்களை எதிர்த்து எழுதியதுதான் நாமும் இங்கு ஒரு அடையாளமிட வழிசெய்தது, அவ்வகையில் அங்கிள் நம் நன்றிக்கு உரியவர்

அன்னாரால் தமிழகத்துக்கு நிகழ்ந்த பெரும் நன்மை என்ன தெரியுமா?

1950களில் திமுக இப்படித்தான் சவுடால் விட்டு திரிந்தது, இப்படித்தான் இல்லா பொய்கள் எல்லாம் பேசினார்கள் என தமிழகம் உணர்ந்துகொள்ள அவரையும் அவர் கோஷ்டியினையும் விட்டால் யாருமே இல்லை

அவ்வகையில் அவர் பெரும் நல்ல விஷயத்தை செய்கின்றார், வாழ்த்துக்கள்

சைமனிடம் நாம் கேட்பது ஒன்றுதான், மயிலுக்கு தோகை அழகு, சேவலுக்கு கொண்டை அழகு, சீமானுக்கு அந்த பொய்தான் அழகு

தயவு செய்து திருந்தவேண்டாம், இப்படியே தொடரவும் அதுதான் தமிழர் சிரிக்க நல்லது

நின்றுபோன கடிகாரமும் இருவேளை சரியான நேரம் காட்டும் என்பார்கள், அப்படி திடீரென சில உண்மைகளை அங்கிள் கேட்டுவிடுவது உண்டு

திராவிட அழிச்சாட்டியத்தின் சில அட்டகாசங்களை அன்னார் கேட்பார் ஆனால் ஓவராக பொய் சொல்லி விஷயத்தை குழப்பிவிடுவார் என்பதுதான் சோகம்

தமிழனை ஏமாற்றுவது மிக எளிது என்பதையும், இங்கு அரசியல் செய்ய பொய்யும் புரட்டும் அவசியம் என்பதையும், திமுக எப்படி அழிச்சாட்டியம் செய்து அதிகாரத்து வந்ததையும் கண்முன் காட்டிகொண்டிருக்கும் சைமனுக்கு இன்று பிறந்தநாளாம்

அவரை கண்டு அச்சபட ஒன்றுமில்லை, திராவிடம் போல தலித்தியம் போல அவர் ஒரு தமிழம் கொண்டு தொழில் செய்கின்றார், முடிந்ததை சம்பாதிக்கின்றார் வேறொன்றுமில்லை

எம்மையும் எழுத்தாளனாக்கிய அந்த மகானுக்கு நன்றிகள், அவர் 60 ஆயிரம் பிறை காண வாழ்த்துக்கள், அவர் வாழட்டும் தமிழகம் சிரிக்கட்டும், எல்லோரும் மகிழட்டும்