மகிழ்ச்சி நிலைக்க பிரார்த்திப்போம்
திருவிழா முடிந்த ஊரில் பந்தலை , மின் விளக்குகளை பிரிப்பது போல தன் எஸ் 400 உட்பட பல விஷயங்களை சிரியாவில் இருந்து அகற்றுகின்றது ரஷ்யா
ஐ.எஸ் தலைவனை போட்டு தள்ளியாகிவிட்டதால் இனி ஐ.எஸ் பயம் இல்லை, குர்துகளும் சைலன்ட் மோடுக்கு போயாகிற்று, அமெரிக்கா அமைதி என்பதால் அரசுக்கு எதிரான போராளிகளும் மல்லாக்க படுத்தாயிற்று
இதில் டிரம்பே முன்பு தீவிரவாதிகளுக்கு எதிராக எமது யுத்தம் என்ற நிலையில் இருந்து சிரிய எண்ணெய் வயல்களுக்கு அதாவது வடக்கே ஈராக்கையொட்டிய எமது எண்ணெய்க்கு (ஆம் அவருடையதாம்) நாம் பாதுகாப்பு அவ்வளவுதான் எம் தேவை என சொல்லிவிட்டார்
ஆக தன் நிலையினை அமெரிக்கா தெளிவாக சொல்லிவிட்டது
அவன் புத்தியே அதுதான் , சரி பங்காளி அவன் வாலாட்டினா சொல்லு என கிளம்புகின்றது ரஷ்யா
அமெரிக்க படை முழுவதும் அகலவில்லையே என்றால் “அவனுக போக மாட்டானுக கொஞ்சம் எண்ணெய்தானே எடுத்துட்டு போகட்டும் விடு” என சொல்லிவிட்டது ரஷ்யா
ஆக சிரியபக்கம் அமைதி, ரஷ்யா ஒதுங்குவதில் இஸ்ரேலுக்கு ஏக மகிழ்ச்சி, இனி சிரியாவில் அடிக்கடி அடிக்கலாம் என குதூகலம்
ரஷ்யாவுக்கு நிதி உட்பட பல சிக்கல், ஆண்டு இறுதி உட்பட பல விஷயங்களில் அது திரும்புகின்றது என்கின்றன செய்திகள்
எப்படியோ சிரியாவில் அமைதி திரும்பினால் எல்லோருக்கும் மகிழ்ச்சி, திரும்பிய மகிழ்ச்சி நிலைக்க பிரார்த்திப்போம்
இது உலக போராகி உலகம் அழிந்து இயேசு வரவில்லை என்ற சோகத்தில் இருக்கின்றன அல்லேலூயா கோஷ்டிகள்..