திமுகவில் இனி தலைவருக்கு கூடுதல் அதிகாரம்
திமுகவில் இனி தலைவருக்கு கூடுதல் அதிகாரம், திமுக கூட்டத்தில் முடிவு
எப்படிபட்ட முரண் இது?
பெரியார் சர்வாதிகாரிய் இருக்கின்றார் இது ஜனநாயகம் அல்ல என்றுதான் திமுக தொடங்கினார்கள்
தலைவர் என யாரும் இல்லை இருக்கவும் கூடாது என சொல்லி வராத பெரியாருக்காக அந்த நாற்காலி காலி என நீலிகண்ணீர் வடித்தார்கள்
ஏ”னப்பா, தலைவருக்கான நாற்காலி பெரியாருக்கு என்றால் ஏன் தனிகட்சி? அங்கேயே இருந்து பெரியாரை அமரவைத்தால் என்ன? பின் எதற்கு தனி கட்சி வெற்று நாற்காலியும் நாடக கண்ணீரும்” என கேட்கப்ட்ட கேள்விக்கு அண்ணாவிடம் வழக்கமான புன்னகையே பதிலாக வந்தது
பின் இக்கட்சியில் எல்லோரும் தோழர் என்றார்கள், எல்லோரும் சமம் என்றார்கள்
அண்ணாவுக்கு பின் கொஞ்சம் கொஞ்சம் இறுக்கமானார்கள், கலைஞர் இன்னும் இருக்கினார் ஆனால் ஓரளவு ஜனநாயகம் காத்தார்
இன்று ஸ்டாலின் முடி சூட்டிகொண்டார்
ஸ்டாலின் எல்லா அதிகாரத்தையும் எடுத்திருக்கலாம், ஆனால் தமிழகத்தின் எல்லா வாக்குகளையும் ஏன் திமுகவினரின் மொத்த வாக்குகளையும் அவரே செலுத்திவிட முடியுமா என்ன?