அதில்தான் மசூதிகட்டினான் புதிதாக வந்த பாபர்

ஆப்கன் வழியாக இங்கு ஊருருவும் முயற்சியினை அலெக்ஸாண்டர் தொடங்கி வைத்தான், பின் அவன் தளபதிகளும் அதை செய்தார்கள்

அதன் பின்பும் அது தொடர்ந்தது, மதம் என்பது விஷயம் அல்ல. அலெக்ஸாண்டர் கோஷ்டி கிரேக்க வகையறா

பின்பு புத்தமதம் ஆப்கனை முற்றுகையிட்டு அரவணைத்தது அப்பொழுது கனிஷ்கர் போன்றோரின் ஆட்சி அங்கு நீடித்திருக்கின்றது

பின்பு ஆப்கனை இஸ்லாம் எடுத்துகொண்டது, கஜினி முகமது போன்றோர் ஆட்சிக்கு வந்தனர். கஜினி முகமது இந்தியாவில் ஊடுருவிய ஆப்கன் முதல் மன்னன்

இங்கு ஆட்சியினை அமைக்க வேண்டும் என்பது அவன் நோக்கமல்ல, வருவதும் ஓடுவதும் முடிந்தால் கொள்ளை அடிப்பதுமாக இருந்தான். 17 முறை அவன் முயற்சித்தான் சில முறை தோற்றான் சில முறை வென்றான்

அவனுக்கு பின் வந்தான் கோரி, இங்கு பிரித்விராஜனுக்கும் அவன் மாமனுக்கும் இருந்த சண்டையினை பயன்படுத்தி இங்கு வென்றான் வென்றவன் இந்தியர் தனக்கு எதிராக கிளம்பிவிட கூடாது என தன் அடிமைகளில் ஒருவனை நியமித்துவிட்டு சென்றான், அவர்கள் தான் குதுபினாரை கட்டினார்கள்

சென்றவன் அப்படியே செத்தான், அதன் பின் ஆப்கனை செங்கிஸ்கான் விழுங்கினான். இதனால் இக்கோஷ்டி ஆப்கன் பக்கம் செல்லாமல் இங்கே மாறி மாறி ஆண்டார்கள், துக்ளக் எல்லாம் அவ்வரிசை

எந்த ஆப்கானியனுக்கும் டெல்லியில் ஆளும் ஆசை இல்லை, இந்தியா அடித்துவிரட்டும் என்றுதான் எண்ணினார்கள், கோரி கூட செத்தால் சாகட்டும் என அடிமையினைத்தான் விட்டு சென்றான்

அடிமைகளும் ஆப்கன் திரும்ப முயற்சித்தார்கள் ஆனால் செங்கிஸ்கானுக்கு அஞ்சி டெல்லியிலே தங்கிவிட்டார்கள், சந்ததி வளர்ந்தது

செங்கிஸ்கான் எனும் மாபெரும் புயல் ஐரோப்பா நோக்கி சென்றதால் இந்தியா தப்பித்தது, எனினும் அவனின் வம்சத்தில் ஒன்று இந்தியா நோக்கி பின்னாளில் வந்து வெறியாட்டம் ஆடியது அவன் பெயர் தைமூர், உஸ்பெக் தாதா அவன்.

அவனும் இந்தியாவினை நொறுக்கி போட்டு கொள்ளை அடித்து கிளம்பினான்

இந்த தைமூரின் வாரிசுதான் பாபர், அவனும் வழக்கம் போல் இந்தியா நோக்கி வந்தான் வந்தவனுக்கும் லோடி எனும் அதே ஆப்கன் வம்சாவளிக்கும் மோதியது பாபர் வென்றார், உபயம் அவரின் பீரங்கிகள்

ஆம் மங்கோலியருக்கு மார்க்கோ போலோ சொல்லிகொடுத்த பீரங்கி நுட்பம் பாபர் வழியாய் இந்தியாவுக்கும் வந்தது

அப்படி பாபர் வரும் பொழுது இங்கு எல்லாம் அதாவது இந்து ஆலயங்கள் பெரும்பாலும் இடிந்து நொறுங்கி கிடந்தன, சோமநாதபுரி போல ஏகபட்ட ஆலயங்கள் உண்டு

கஜினி முதல் தைமூர் வரை ஆடிய ஆட்டம் அவை

தென்னியந்தியாவில் இச்சிக்கல் வராமல் இருக்க நாய்க்க அரசும், மராட்டியரும் காவல் இருந்தனர் இதனால் தென்னக ஆலயம் தப்பின‌

வடக்கே அப்படி அல்ல ஆளாளுக்கு வந்து நொறுக்கினார்கள், அப்படி அன்றைய ராமர்கோவிலும் நொறுக்கபட்டு ஆனால் அதன் அருகில் மக்கள் கண்ணீருடன் வழிபாடு செய்திருக்கலாம்

அதன் மேல் பாபர் மசூதி கட்டியிருக்கலாம்

மற்றபடி அவ்விடம் புத்தர் கோவிலாக இருக்க வாய்ப்பே இல்லை, இருந்திருந்தால் அந்த இடம் ஜென்மபூமி என்றும் அந்த பகுதி ராம் கோட்டை எனவும் அழைக்கபட்டிருக்காது

ஜென்மபூமி என்ற இடிபாடுகளின் மேல்தான் மசூதிகட்டபட்டது, அது ஜென்மபூமியின் மசூதி என்றுதான் மொகலாயரின் குறிப்புகளிலும் உண்டு

சோமநாதபுரி போல நொறுக்கபட்ட ஏகபட்ட ஆலயங்கள் வடக்கே உண்டு, அதில் அயோத்தியும் சேர்ந்திருக்கலாம்.

இந்த சிக்கலுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

அன்றே கைபர் போலன் கணவாயில் 50 அடி உயரத்துக்கு ஒரு சுவர் எழுப்பியிருந்தால் ஒரு ஆப்கானியன் உள்ளே வந்திருக்கமுடியாது, ஏதோ வர்த்தகத்துக்கும் கனிஷ்கா போன்ற அரசர்களின் காலத்தில் ஆப்கன் இருந்ததால் அதை விட்டு வைத்தார்கள், விளைவு இச்சிக்கல்கள்

( இன்றும் ஆப்கனுக்கு வழி பாகிஸ்தானில் இருந்து இவ்வழிதான், உப்பு முதல் எல்லாமு இவ்வழி வழியேதான் ஆப்கானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் செல்கின்றன. பாகிஸ்தானின் பெரும் வருமானம் அது )

சீனா போல 2000 கிமீட்டருக்கு சுவர் வேண்டாம் , சுமார் 500 மீட்டருக்கு இருந்திருந்தாலே இச்சிக்கல் வந்திருக்காது

இன்னொருவன் அந்த லோடி, அவன் பாபரை விரட்டி இருந்தால் மசூதியும் வந்திருக்காது

ஆம் இஸ்லாமிய ஆட்சி டெல்லிக்கு வந்து முதல் 400 ஆண்டுகாலம் அங்கு மசூதி இல்லை. அந்த இடத்தில் புத்தன் ஆலயமுமில்லை

தொன்று தொட்டும், சுல்தான்கள் ஆட்சியிலும், மொகலாயர் ஆட்சியிலும் பிரிட்டானியர் ஆட்சியிலும் அங்கு இந்துக்கள் வழிபாடு செய்ததும், பிரிட்டானியர் இந்துக்களுக்கு சில சலுகைகள் கொடுத்ததும் வரலாற்றில் இருக்கின்றது

இடிபாடுகளுடன் கிடந்த இடத்தை ராமர் கோட்டை , ஜென்ம பூமி என்றுதான் அழைத்து வழிபாடுகளை செய்து வந்தனர் மக்கள்

அதில்தான் மசூதிகட்டினான் புதிதாக வந்த பாபர்.