திருநெல்லை நாராயண சேஷன்
அவர் ஒரு தமிழர் அல்லது திராவிடர். அன்றைய பிரிக்கபடாத சென்னை மாகாணத்தின் பாலக்காட்டு பக்கம் பிறந்தவர்
திருநெல்லை நாராயண சேஷன் . ஆம் அவர் பாலக்காட்டு அய்யர் மரபு. அன்றைய பாலக்காடு தமிழகத்தின் அங்கமாய் இருந்தது
அந்த சேஷன் சென்னையில்தான் கல்வி பயின்றார், தமிழனனாகத்தான் வளர்ந்தார் பின் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார்
அவரின் அறிவும் திறமையும் அவரை தேர்தல் ஆனையத்தின் தலைவராக உயர்த்தின, தேர்தல் ஆணயத்துக்கே பெரும் திருப்புமுனைகளை புது வழிகாட்டியினை அவர்தான் உருவாக்கினார்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற வழக்கத்தை அவரே கொண்டுவந்தார், அதுவரை விதிமுறை என எதுவுமில்லை, அரசு முதல் நள்ளிரவு ஸ்பீக்கர் வரை அலறிகொண்டிருக்கலாம்
தேர்தல் ஆணையத்துக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்பதை, நீதிமன்றம் வரை சென்று, உறுதிப் படுத்தியவர் அவர்தான், அரசியல்வாதிகளுக்கும் அவருக்குமான யுத்தம் அப்படியானது
தேர்தல் நடத்தைகள் என இன்று காணும் எல்லா கட்டுப்பாடும் அவர் கொண்டுவந்ததே இல்லாவிட்டால் இன்று தேர்தல் என்பது இவ்வளவு கட்டுகோப்பாய் இராத்
கள்ளவோட்டை தடுக்க வாக்காளர் அடையாள அட்டை கொண்டுவந்ததும் அவரே, அவர் காலத்தில்தான் வாக்கு எந்திரங்கள் அறிமுகமாயின
வாக்கு மையம் முன்னால் கும்மி அடிப்பது, வாக்கு எண்ணும் மையம் முன்னால் அழிச்சாட்டியம் செய்வது போன்றவற்றை அவர்தான் ஒழித்தார்
வேட்பாளருக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கும் கிடுக்குபிடி போடும் வழக்கத்தை கொண்டு வந்தது அவர்தான்
உத்தர பிரதேச கவர்னரும், காங்கிரஸ் பிரபலமுமான மோதிலால் ஓரா தன் மகன், மத்திய பிரதேச வேட்பாளராக நின்றபோது, அவருக்காக பிரசாரம் செய்தார். அப்போது, கவர்னர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக, ஓட்டுப்பதிவை தள்ளி வைத்து உத்தரவிட்டார் சேஷன்
இதனால், கவர்னராக இருந்த மோதிலால் ஓரா பதவி விலக வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கும் சேஷனுக்கும் நடந்த யுத்தம் கடுமையானது, கடைசி வரை சேஷன் நியாயம் தர்மம் காத்து நின்றார், அவரை விரட்டவும் முடக்கவும் பலமான அஸ்திரங்களை ஏவி பார்த்து தோற்றது காங்கிரஸ்
பின் அந்த சேஷனை குடியரசு தலைவர் தேர்தலில் பழிவாங்கியது காங்கிரஸ், அவர் குடியரசு தலைவராகும் தகுதியும் வாய்ப்பும் இருந்தது
ஆனால் பாலக்காடு அய்யரான அவரை கே.ஆர் நாராயணன் எனும் தாழ்த்தபட்டவரை நிறுத்தி தோற்படித்தது காங்கிரஸ்
அது என்னவோ தெரியவில்லை கலாம், சேஷன் போன்ற நியாயவான்கள் குடியரசு தலைவராவதை காங்கிரஸ் விரும்பவே இல்லை, அந்த பாவமோ என்னமோ இன்று வீழ்ந்து கிடக்கின்றது
நிச்சயம் சேஷன் குடியரசு தலைவராயிருந்தால் பல அதிரடிகளை செய்திருப்பார், அதை ஏனோ கெடுத்தது காங்கிரஸ்
அவர்களால் கொண்டுவரபட்ட கே.ஆர் நாராயணனுக்கு இந்தியாவின் முதல் தலித் குடியரசு தலைவர் என்பதை தவிர ஒரு சிறப்புமில்லை
நிச்சயம் சேஷனை அதில் அமர்த்தியிருக்கவேண்டும், தேசம் செய்யவில்லை. பாஜகவும் அவரை முழுமையாக கண்டுகொள்ளவில்லை அல்லது சேஷன் முழுக்க ஒதுங்கியிருந்தார் என்பதும் சோகம்
சேஷன் ஒரு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு இலக்கணமாய் இருந்தார்
சேஷன் எனும் நாகம் தன் ரத்தினத்தை காப்பது போல தேர்தல் ஆணையத்தின் மகத்துவத்தை மாண்பினை காத்தார்
இந்தியா எனும் மாபெரும் நாட்டில் பலநூறு கட்சிகளை மிரட்டல்களை, காங்கிரஸ் அரசின் அட்டகாசத்தை மீறி அவர் செய்த சீர்திருத்தங்களை உலகமே போற்றியது
பிலிப்பைன்ஸ் அரசு மகசேச விருதை அளித்து கவுரவபடுத்தியது
அந்த பெருமகனார் சேஷன் இன்று காலமாகிவிட்டார்,
தேர்தல் ஆணையத்துக்கு பெரும் திருப்பு முனை கொடுத்து நியாமான அதிகாரிக்கு என்றும் உருவமாய் நிற்கும் அந்த சேஷன் மறைந்தாலும் தேர்தல் ஆணையம் இருக்கும் வரை வாழ்வார்
அந்த கம்பீரமும் முகத்தில் இருந்த உறுதியான தெளிவும் மறக்கமுடியாதவை,
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதற்கு இலககணமாக வாழ்ந்தவர் அவர்.
ஆம் அவரிடம் முழு உண்மையும் தர்மமும் இருந்தது, கடைசிவரை அதில் அவர் நின்றதால் அந்த கம்பீரமும் தைரியமும் அந்த முகத்தில் எக்காலமும் இருந்தன
உண்மையின் மகத்துவம் அதுதான்
