மலேசியாவின் பத்துமலை முருகன் கோவில்

மலேசியாவின் பத்துமலை முருகன் கோவில் எல்லோரும் அறிந்த ஒன்று, அந்த மலையும் அதில் இருக்கும் அற்புதமான குகையும் பிரசித்தி பெற்றவைஅந்த குகை உலகின் அற்புதமான இடங்களில் ஒன்று, அதில் நின்றாலே ஒருவித தெய்வீக தன்மை மனதில் குடியேறும், ஏன் அக்கால முனிகள் குகையினை தேடி தவமிருந்தார்கள் என்பது அந்த இடத்தில் அற்புதமாக தானே புரியும்அந்த பத்துமலை வளாகம் இப்பொழுது தன் தெய்வாம்சத்தை கூட்டிகொண்டே செல்கின்றதுஅந்த வளாகத்தில் சிவன் கோவில் ஒன்று மீனாட்சியம்மன் சந்நிதி, அறுபடை வீடுகளுக்கான சந்நிதி என ஏற்கனவே உண்டு,சனிபகவானுக்கும் தனி கோவில் உண்டுஇப்பொழுது ஆஞ்சநேயருக்க்கும் அப்படியே திருப்பதி ஏழுமலையானுக்கும் தனி கோவில் அமைத்திருக்கின்றார்கள்அந்த பெருமாள் கோவில் சிறியது ஆனால் பெரும் பீடமாக அதை எழுப்பி அதில் அழகான ஆலயம் அமைத்திருக்கின்றார்கள், பெருமாள் 12 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சிதருகின்றார்நேற்று அந்த கும்பாபிஷேகம் நடந்தது, அறை நண்பன் அழைப்பின் பேரில் சென்றாயிற்றுசும்மா சொல்ல கூடாது, அக்காலத்து மன்னர்கள் இப்படித்தான் பெரும் செலவில் கும்பாபிஷேகம் நடத்தி இருப்பார்கள் என்று தோன்றிற்று,அவ்வளவு விற்பனர்கள் தனியாகசாலையில் பல நாட்களாக யாகம் நடத்தி அந்த யாகத்தின் பலனை நேற்று கும்பாபிஷேமாக முடித்தார்கள்கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது வானிலிருந்து ஹெலிகாப்டர் பூவெல்லாம் தூவியது, மென்மையான அப்பூக்கள் மெதுவாக கீழிறங்கிய காட்சி அவ்வளவு அழகானதுசைவ வைணவம் என்றெல்லாம் இல்லை, இந்த வளாகத்தில் முருகன், சிவன், திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் ஆஞ்சநேயர் என எல்லோருக்கும் கோவில் என வைத்துவிட்டார்கள்,அருகில் ஒரு குகையில் ராமாயண காட்சிகள் எல்லாம் சிலையாய் இருக்கின்றன‌அந்த கும்பாபிஷேகத்தை காண அவ்வளவு அழகாயும் உருக்கமாகவும் இருந்தது, கும்பாபிஷேகம் நடக்க நடக்க அழகான செய்திகளை உருக்கமாக சொல்லிகொண்டே இருந்தார்கள்அந்த ஆலயத்தில் திருவரங்க பெருமாள் பள்ளிகொண்ட கோலமும் அழகாய் வரையபட்டிருக்கின்றது, பத்மாவதி தாயாருக்கு தனி சந்நதி உண்டுமலேசிய இந்துக்களை போல ஆலயங்களை பராமரிக்கவும் முடியாது, சம்பிரதாயங்களை பின்பற்றவும் முடியாதுசிறிய ஆலயம் என்பதால் பராமரிக்க எளிது என்றல்ல, மிக சிறந்த கவனத்தை அதில் செலுத்துகின்றார்கள், பழமை மாறாமல் புதுமைக்கு வருவது என்பது அவ்வளவு அழகான விஷயம் அதை செய்கின்றார்கள்தமிழக இந்து ஆலயங்கள் பிரமாண்டமானவை எனினும் மலேசிய இந்துமக்கள் தொகையினை விட தமிழக இந்து மக்கள்தொகை பல கோடிகள் அதிகம் என்பதால் அங்கும் அதை அழகாக செய்யலாம்ஆனால் அறநிலையதுறை எனும் அரக்கனை வீழ்த்தாமல் சாத்தியமில்லைமலேசியாவில் இந்து ஆலயங்களில் சுதந்திரமானவை, பக்தர்கள் தேவஸ்தான போர்டுகள் மூலம் அப்படி பராமரிக்கின்றார்கள், காலத்தால் பிந்திய ஆலயங்கள் எனினும் அவ்வளவு அழகு அவ்வளவு பொலிவு அவ்வளவு சுத்தம்முறையான பூஜைகள், துல்லியமான அர்ச்சனை மந்திரங்கள், சர்வ சுத்தமான சாங்கியங்கள்அப்படிபட்ட ஆலயங்களில் தெய்வம் வாழும் , அதை வழிபடும் பக்தர்களும் வாழ்வார்கள்மலேசியாவில் எல்லா ஆலயங்களும் சிறப்பானவை, ஆனால் தெப்பகுளம் மட்டும் மிஸ்ஸிங்.பத்துமலை அடிவாரத்தில் ஒருகுளம் இருக்கின்றது, மீன்கள் பெருகிகிடக்கின்றன , அதை தெப்பமாக்கலாம், சொல்லமுடியாது அவர்களிடமும் பெரும் திட்டம் இருக்கலாம்கும்பாபிஷேக காட்சிகளும் புது ஆலயமும் அக்கால தமிழக மன்னர்கள் செய்த திருப்பணி காலத்துக்கும் காட்சிகளுக்கும் இழுத்து சென்றன, எப்படி எல்லாம் சிரமபட்டு உருவாக்கி இருப்பார்கள்? எவ்வளவு மக்களும் உழைப்பும் கலைகளும் வித்தைகளும் கொட்டபட்டிருக்கும்எவ்வளவு விற்பனர்கள் உழைத்திருப்பார்கள்?நினைவு அப்படியே வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சென்றது, அது திருசெந்தூருக்கு அடுத்தபடி குறிப்பிடதக்க முருகன் ஆலயம். ஆனால் ஏனோ பெரும் அடையாளமில்லை இவ்வளவுக்கும் அருணகிரி நாதர் பாடிய தலம், குகை ஆலயம் அதுஅது வரலாற்றில் மிக மிக முந்தியது, திருசெந்தூர் ஆலயத்தை போன்றே பழமையானது, விஷயம் என்னவென்றால் அது நாயக்கமன்னர்களின் ஆட்சியிலும் பாண்டியனின் ஆட்சியில் நீடித்திருக்கின்றதுவள்ளியூரில் ஒரு பாண்டிய அரசன் இருந்திருக்கின்றான் அவனின் கட்டுபாட்டில் ஏதோ ராஜதந்திர உரசலில் அந்த ஆலயம் திருசெந்தூர் அளவு தெரியாமல் போய்விட்டது எனினும் முருக பக்தர்களுக்கு அது திருதலமேவள்ளி பிறந்தது அந்த பகுதியாக இருக்கலாம், காரணம் அதனை அடுத்த மலை குறத்திமலை என்றுதான் இன்றும் அழைக்கபடுகின்றதுவள்ளியினை முருகன் அந்த பகுதியில் தான் மணந்திருக்க வேண்டும், ஏகபட்ட அடையாளங்கள் அங்கு சாட்சியாய் நிற்கின்றதுதிருப்பதி திருகாளத்தி என அடுத்தது பண்டைய சைவ வைவண தலங்கள் உள்ளது போல நம்பிமலை நம்பியாழ்வார் ஆலயமும் வள்ளியூர் முருகபெருமான் ஆலயமும் அமைந்திருப்பது பன்னெடுங்கால தொடர்ச்சிஅங்கு பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்திருக்கின்றனர், சரவண பொய்கை மற்றும் தெப்ப குளமெல்லாம் உண்டு, அதற்கு நீர்வழி பாதையும் செய்திருக்கின்றார்கள்அங்கு வருடாவருடம் தெப்ப திருவிழா நடைபெறும், ஆனால் சில ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகளை செய்யும் டிவிஎஸ் நிறுவணம் இழுத்துகொண்டிருப்பதால் இந்த ஆண்டும் தெப்பதிருவிழா இல்லை என்கின்றார்கள்கார்த்திகை மாதம் முருகபெருமானை அந்த ஆலயம் கொண்டாடும் அழகே சுவாரஸ்யமானது அந்த நிகழ்வின் கொண்டாட்டமே தெப்ப திருவிழாஅது தள்ளிசெல்வது அம்மக்களுக்கு வருத்தமே, நேற்றைய கும்பாபிஷேகம் காணும் பொழுது அதுவும் நினைவுக்கு வந்ததுநிச்சயம் பத்துமலை பகுதி தமிழர் மலேசியாவுக்கு குடிவந்தபின்பே இப்படி மாறி வந்திருக்கும் கிட்டதட்ட 300 ஆண்டுகள் முன்னால் கூட அது இப்படி இருந்திருக்கமுடியாதுஅருமை தமிழகத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான ஆலயங்கள் கூட முறையாக பேணபடவில்லை என்பது ஒருவித வலிகாலம் எல்லாவற்றையும் சரி செய்யும்அந்த பத்துமலை எல்லா நாட்டு மக்களும் வரும் இடம், உலகின் ஒவ்வொரு இனத்தையும் அங்கு பார்க்கலாம், மிகபெரும் சுற்றுலா தலமும் கூட‌எனினும் ஆலயத்தில் நுழையும் வெளிநாட்டவர் சில சம்பிரதாயங்களை கடைபிடிக்க போதிக்கபடுகின்றது அவர்களும் மகிழ்வாக ஏற்கின்றார்கள், ஐரோப்பியர் அமெரிக்கரும் நெற்றியில் குங்கும விபூதியுடன் வலம் வருவதும், வெள்ளை குழந்தைகள் ஓடி வந்து ஆரத்தி தட்டை வணங்குவதும் வாடிக்கைஎம்மை நோக்கி ஒரு ஜப்பானிய பெண் வந்தாள் இந்த உறங்கும் புத்தர் எங்கே என விசாரித்தாள், நாமோ இது இந்து ஆலயம், உறங்கும் புத்தர் வேறு பவுத்த ஆலயங்களில் இருப்பார் என சொல்லிபார்த்தோம்அவளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை எமக்கு ஜப்பானிய மொழி தெரியவில்லை,ஆனாலும் அவள் அந்த புத்தனை விடுவதாக இல்லை, கையில் வைத்திருக்கும் படம் அதாவது அவளின் டூரிஸ்ட் கம்பெனி கொடுத்த படத்தை காட்டினாள்நாம் அவளுக்கு 10 நிமிடம் பாடம் எடுத்தோம், அவளோ கடைசியில் “ஸ்லீப்பிங் புத்தா ஐ லைக்” என சொல்லிவிட்டு குகைக்குள் ஓடிவிட்டாள், அது ராமயண காட்சிகளை சிலையாய் அமைத்திருக்கும் சிலை, பல நூறு சிலைகள் உண்டு, பார்க்க வேண்டிய இடம் அது.கடைசியில் நாம் கிளம்பும்பொழுது எதிரே வந்தாள் , “, வாட் எ பியூட்டி,. வாட் எ புத்தா, ஹிஸ் டிசிப்பிள் ஆல்சோ கியூட்” என மிக மகிழ்வாய் சொல்லிவிட்டு அவள் எடுத்த படத்தை காட்டினாள்அதில் கும்பகர்ணன் சிலை முன் அவள் சிரித்து கொண்டிருந்தாள், அச்சிலை மகா பிரமாண்டமானதுஆம் உறங்கி கொண்டிருந்த கும்ப கர்ணன் அவளுக்கு தூங்கும் புத்தனாய் தெரிந்திருக்கின்றான், அருகில் நின்ற அரக்கர்கள் புத்தனின் சீடனாய் தெரிந்திருக்கின்றார்கள்உறங்கும் விஷ்ணுவினை தூங்கும் புத்தனாய் மாற்றிகொண்டது புத்தமதம், அவளுக்கோ உறங்கும் கும்பகர்ணன் புத்தனாய் தெரிந்திருக்கின்றான்அவளுக்கு விளக்கி சொன்னால் மட்டும் புரியவா போகின்றது?”ஆம் இவரே தூங்கும் புத்தன், இதை பெரிதாக மாட்டி அனுதினமும் வணங்கு” என சொன்னோம் , “டெபனட்லி டெபனட்லி” என சொல்லிவிட்டு மான்குட்டி போல ஓடிகொண்டிருந்தாள்