அண்ணாவும் கருணாநிதியும் இதையா சொல்லி கொடுத்தார்கள்?

பத்திரிகையாளர் மதனுக்கும் , மாரிதாஸ் என்பவருக்கும் திமுக பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுவது ஏற்கமுடியாதது

அரசியல் என்றால் விமர்சனங்கள் வரும், விமர்சனத்துக்கு கொலைமிரட்டல் என்பதெல்லாம் கோழை அரசியல்

பஞ்சமி நிலத்தின் மூலபத்திரம் இன்னும் வரவில்லை, பட்டாவினை காட்டிவிட்டு பத்திரத்தை காட்டமாட்டேன் என்பதெல்லாம் சரியல்ல‌

மிசாவில் ஸ்டாலின் கைதான ஆதாரம் இன்னும் ஒருவரும் கொடுக்கவில்லை, அமெரிக்காவில் இருக்கின்றது அண்டார்டிக்காவில் இருக்கின்றது என்பதெல்லாம் முறையான பதிலா?

சாதாரண கேள்விகளுக்கே கொலைமிரட்டல் வரை செல்லும் திமுகவிடம் ஆட்சி சிக்கினால் என்னவெல்லாம் செய்வார்கள்?

இவர்கள் எல்லோரையும் விமர்சிப்பார்கள், ஆனால் இவர்களை யாரும் எதுவும் விமர்சித்தால் நியாயமான ஆதாரங்களை கேட்டால் கொல்வோம் என்பது என்ன வகை?

தமிழ்நாட்டு அரசியல் இவர்களுக்கு மட்டும் குத்தகைக்குவிடபட்டிருகின்றதா என்ன?

மத்திய அரசை,மாநில அரசை எல்லாம் கண்டிக்கும் திமுக தலமை தன் சொந்தகட்சிக்காரனை இன்னும் தட்டி வைக்காததும் கண்டிக்காததும் மகா சோகம்

தொண்டனை கொலைவெறியினை தூண்டிவிடும் தலைவன் அல்லது தொண்டர்களின் கொலைவெறியினை தட்டிவைக்கா தலைவன் என குரல்களும் கண்டிப்பும் ஸ்டாலினை நோக்கி திரும்புகின்றது

மாரிதாஸுக்கும் மதனுக்கும் சிறு சிராய்ப்பு நேர்ந்தாலும் திமுகவும் அதன் தலமையும்தான் பொறுப்பு

திமுகவினரின் மிரட்டல் ஒரு தீவிரவாத கும்பலின் , கட்டபஞ்சாயத்து கும்பலின் மிரட்டல் தொணியில் இருக்கின்றது என்பது வெறுக்கதக்க ஒன்று

இவர்களின் வரலாறும் மோசமானது இந்திரா மேலான தாக்குதல் முதல் ராஜிவ் கொலையில் சிக்கியது வரை, அதன் பின்பும் ஏராளமான கொலைபழிகள் உண்டு

தா.கிருட்டினன் கொலை முதல் மதுரை பத்திரிகையாளர் கொலை, லீலாவதி கொலை போல ஏதும் அசட்டுதனமாக திட்டமிட்டால் திமுக என்றொரு கட்சிக்கே கேடாய் முடியும்

திமுக தலமை இதை உணர்வது நல்லது இல்லையேல் அது கொடுக்கும் விலை மிக அதிகமாய் இருக்கும்.

நாங்களே தமிழ்நாட்டின் ஏகபோக பிரதிநிதிகள், நாங்கள் எல்லோரையும் விமர்சிப்போம் விரட்டுவோம் ஆனால் எங்களை யாரும் கேள்விகேட்டால் கொல்வோம் குத்துவோம் என்பதா திராவிட கொள்கை?

அண்ணாவும் கருணாநிதியும் இதையா சொல்லி கொடுத்தார்கள்?

ஊழல் மட்டுமல்ல கொலையும் செய்ய கற்றுகொடுத்த இயக்கமா திமுக?