பெரிய இடத்து உறவுகள் இப்படித்தான்

அயோத்தி வழக்கை நடத்திய வழக்கறிஞர் கமலஹாசனின் மாமன் மகன் என்கின்றது செய்தி

பொதுவாக அழிச்சாட்டியம் செய்பவர்களின் மாமன் மகன்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருப்பார்கள்

நாம் தமிழர், இந்தி எதிர்ப்பு இன்னும் ஏகபட்ட இம்சைகளை செய்யும் பத்திரிகை தினதந்தி, அந்த ஆதித்தனுக்கு பின் சிவந்தி ஆதித்தனும் அதையே செய்தார்

ஆனால் சிவந்தியின் மாமன் மகனான சிவநாடார் டெல்லியில் படித்து இந்தி எல்லாம் படித்து பெரும் தொழிலதிபராகி பெரும் உயரம் சென்றுவிட்டார், இங்கே தினதந்தி தந்திடிவி எல்லாம் அதே கோஷத்துடன் உருண்டு கொண்டிருக்கின்றது ஒன்றும் உருப்படியில்லை

முக ஸ்டாலின் காவியினை ஒழிப்போம் இந்துத்வாவினை ஒழிப்போம் என சொல்லிகொண்டிருக்க அவரின் மாமன் டிவியான சன்டிவி ஜோதிரம், நட்சத்திர விளக்கம், சமய ரீதியான விஷயங்கள் என அடி பின்னிகொண்டிருக்கின்றது, தயாநிதி மாறன் எப்பொழுது பாஜக பக்கம் ஓடுவாரோ தெரியாது

பெரிய இடத்து உறவுகள் இப்படித்தான்