இதெல்லாம் திமுகவின் திராவிட நியாயங்கள்
வடக்கே எவனோ ஒரு சாமியார் கலைஞர் தலையினை சீவுவேன் என்றதும் அய்யய்யோ இந்துத்வா மிரட்டல், அய்யய்யோ பார்ப்பானிய மிரட்டல் என கதறல்
எவனோ வடக்கத்திய சில்லுண்டி மாட்டுகறிக்கு தகறாறு செய்தால் அது பாஜகவின் அராஜகம்,
எங்காவது மபி உபி பக்கம் இரு சாதிகள் மோதி கொண்டால் அது பாஜக பிராமணிய அராஜகம் மற்றும் திட்டமிட்ட சதி
எங்கோ கவுரவ கொலை நடந்தால் அதெல்லாம் பாஜக அராஜகம், சங்கிகளின் கொலைவெறி
அந்த ஸ்டெயின்ஸை கொன்றவனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை எனினும் அது ஆர்.எஸ்.எஸ்ஸின் சதி
இப்படி எங்கோ எவனோ செய்வதற்கெல்லாம் பாஜக . ஆர்.எஸ்.எஸ் மோடி அமித்ஷாவெல்லாம்எல்லாம் பொறுப்பு
ஆனால் திமுகவினர் மிக பகிரங்கமாக மாரிதாஸையும் மதனையும் கொலைசெய்வதாக மிரட்டினால் அதற்கும் திமுகவுக்கும் திமுக தலைவருக்கும் தொடர்பே இல்லையாம்,
திமுகவினை தாண்டிய தனிபட்ட விஷயங்களாம்
இதெல்லாம் திமுகவின் திராவிட நியாயங்கள்