அரசு விழித்துகொள்ள வெண்டிய நேரமிது
மேல வளவு கொலையாளிகள் விடுதலை செய்யபட்டிருப்பது அதிர்ச்சி செய்தி, அவர்கள் நன்னடத்தை மற்றும் ராமசந்திரன் பிறந்தநாளை ஒட்டி விடுதலை செய்யபடுகின்றார்களாம்
இதென்ன அதிசயம் ராஜிவ்காந்தி கொலையில் 26 பேர் தூக்கில் இருந்து விடுவித்து பறக்கவிடபட்டனர், காரணம் குற்றத்துக்கு தயாராக இருந்தார்களாம் ஆனால் செய்யவில்லையாம்
அந்த இன்னொரு பதில் வெடிகுண்டு ஆதிரை அப்படி விடுவிக்கபட்டாள், அவள் குண்டு கட்டி வந்தாளாம் ஆனால் வெடிக்கவில்லையாம் அதனால் குற்றமில்லையாம்
கடைசியில் இன்னும் 7 பேரை தாலாட்டிகொண்டிருக்கின்றோம்
இப்படிபட்ட பலவீனமான சட்டங்களை வைத்து ஒரு மண்ணாங்கட்டியும் ஆக போவதில்லை, நிச்சயம் இந்நாட்டிற்கான நீதிமன்ற சட்டங்களை வெள்ளையன் எழுதினான் அந்த பீனல் என்பவன் தொகுத்தான்
அதில் பிரிட்டன அரசில் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை கடுமையாகவும் சமூக குற்றங்களுக்கான தண்டனை குறைவாகவும் இருந்தன, சுதந்திர இந்தியாவிலும் பீனல் கோடு அப்படியே ஏற்கபட்டது, அம்பேத்கரும் பெருந்தன்மையாக இருந்துவிட்டார்
ஆக இந்நாட்டு சட்டங்களை அதன் பலவீனமான பக்கங்களில் இருந்து மீட்டெடுக்க இது சரியான நேரம்
மனிதன் பலவீனமான மனதுடையவன் கடுமையான சட்டங்கள் இன்றி அவனை அடக்க முடியாது, சமூகம் அமைதியாய் இராது என்பது மானிட தத்துவம்
ஐரோப்பிய சமூக வாழ்வும் அவர்கள் மனநிலையும் வேறு, வாழ்க்கைமுறையும் சமூக அமைப்பும் வேறு அதனை அடிப்படையாக கொண்ட சட்டங்கள் ஆசியாவுக்கு பொருந்தாது
இதனால்தான் ஆசியாவில் கடும் தண்டனை கொண்ட நாடுகள் முன்னணியில் இருக்கின்றன பெருந்தன்மையான சட்டங்களை கொண்ட நாடுகள் குழப்பத்தில் இருக்கின்றன
கிரிமினல் சட்டம் மட்டுமல்ல சிவில் சட்டங்களும் கடுமையாக்கி காலதாமதங்களை தவிர்த்தாலொழிய நாட்டுக்கு சுபம் இல்லை
முதலில் இந்த தலைவர்கள் பிறந்தநாளில் கைதிகளை விடுவிக்கும் அரசியல் விடுதலைகளை ஒழிக்க வேண்டும், அரசு நீதிமன்ற தண்டனையில் தலையிட முடியாத அளவு வலுவான தளைகள் வேண்டும்
மிக அவசரமாக ஒரு குழு அமைத்து சட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக்கவில்லை என்றால், ஒரு கொலைதானே பரவாயில்லை ஆறு அல்லது ஏழு வருடங்களுக்குள் வந்துவிடலாம் என மனநிலை எல்லோருக்கும் வருமாயின் நாடு நாடாய் இராது
அரசு விழித்துகொள்ள வெண்டிய நேரமிது