கடற்கரை பகுதிகளில் கடும் கவனம் செலுத்துகின்றது மத்திய அரசு
தென்னிந்தியாவில் குறிப்பாக கடற்கரை பகுதிகளில் கடும் கவனம் செலுத்துகின்றது மத்திய அரசு, இலங்கையினை தன் கையில் வைத்திருக்க கடும் பிரயத்யனம் செய்கின்றது
சீனா இலங்கையின் தென்பகுதியில் கால் பதித்திருக்கின்றது, அமெரிக்க கம்பெனி ஒன்று பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்கிய சர்ச்சையில் சிக்கி புகைவர அந்த நிறுவணம் பற்றிய ஒரு மாதிரி தகவல்கள் வருகின்றன
இந்தியா பலாலி உட்பட சில இடங்களை தன் மறைமுக கட்டுபாட்டில் வைத்திருக்கின்றது, மேலதிக பிடியினை தக்க வைக்க அது தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான பாலத்தை அமைக்கலாம் என்கின்றார்கள்
அது என்ன பாலம்? அதேதான் ராமர் பாலம்..
பழமையினை அழிக்காமல் சீனா ஹாங்காங்கிற்கு அமைத்திருப்பது போல நவீன பாலம் அமைக்கபடும் என்கின்றது இந்தியாவின் எதிர்கால திட்டங்களை பற்றிய செய்தி..
முன்பெல்லாம் இம்மாதிரி செய்திகள் வந்தால் அதெல்லாம் நடக்காது என நகர்ந்துவிடலாம், ஆனால் இது ஆச்சரியங்களும் அதிசயங்களும் நடக்கும் காலம் என்பதால் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது