சிதறல்கள்
“ஆட்சியில் இருக்கும் போது தான் நல்லதை கூட பயந்து செய்யனும். ஆனா இப்ப ஆட்சில இல்ல, கெட்டத கூட தைரியமா செய்யலாம். அந்த துணிச்சல் நமக்கு வேணும்” : முக ஸ்டாலின்
____________
தலைவரே ஒரு திருத்தம்
“நாம ஆட்சியில இருந்தாலே கெட்டதுதான் செய்வோம், இப்போ ஆட்சியில இல்ல அதனால நிறைய கெட்டது செய்யலாம் அந்த தைரியம் நமக்கு வேணும்..”
_______________
தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைகள் இல்லை என்பதில் மாற்றுகருத்து இருக்கவே முடியாது, அந்த வெற்றிடம் நன்றாகவே தெரிகின்றது
பழனிச்சாமியும் ஸ்டாலினும் அதை நிரப்பினார்கள் என்றால் அது பிரபாகரன் இடத்தை சீமான் நிரப்பினார் என்பதற்கு சமம்..
________________
திருமாவுக்கு புலிகள் 26 பேர் ராஜிவ் கொலையில் விடுதலையானது நல்ல தீர்ப்பாக தெரிந்தது, 7 பேரின் தூக்கு ஆயுள்தண்டனையானபொழுது நீதிமன்றத்தில் நம்பிக்கை இருந்தது
ஆனால் ராமர்கோவில் தீர்ப்பை அவர் ஏற்கமாட்டாராம்
அவரும் அவர் நியாயமும்..
____________
பாராளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களையும் கைபற்றி பாஜகவுக்கு தண்ணிகாட்டுவோம் என சூளூரைத்தை திமுக இங்கு டெல்லியினை விட்டுவிட்டு…
அட பழனிச்சாமியினையும் விட்டுவிட்டு ..
மாரிதாசுடனும் மதன் என்பவருடனும் மல்லுக்கு நிற்பதுதான் திராவிட சோதனை..
______________
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை
உபயம் அங்கிள் சைமன் என மத்திய அரசு சொல்லாது, நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
____________
வழக்கம் போல் டிவிட்டரில் எதையோ தட்டிவிட்டு சிக்கலில் சிக்கியிருக்கின்றார் டிரம்ப்
டிரம்புக்கும், முக ஸ்டாலினுக்கும் டிவிட்டரில் கண்டம்.
____
அவர்களை நாக்பூர் அடியாட்கள் என சொல்லி தாங்கள் திருக்குவளை கொத்தடிமைகள் என ஒப்புதல் வாக்குமூலம் வழங்குகின்றார்கள், பாவம்