அரசு கழகம் என்றால் இஷ்டத்துக்கு ஆடுவதா?

டெல்லி நேரு பல்கலைகழகம் மிக நல்லமுறையில் இயங்கி வந்தது

மாத வாடகை 100 ரூபாய்க்குள்ளும், சலுகை விலையில் உணவகமும் இன்னும் ஏகபட்ட வசதிகளுடன் விடுதியும் இயங்கி வந்தது.

இந்த தலித் வாசகர் வட்டம் போன்ற சாதிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் தாலியறுப்புகள் நுழைந்த எதுவும் உருப்படாது. அப்படி எதெல்லாமோ புகுந்து அந்த அறிவு கோவிலை பேய்களின் கூடாரமாக மாற்றி வைத்திருக்கின்றன

ஏழை மாணவர்கள் படிக்க பல வசதிகளுடன் நினைத்துபாரா சலுகைகளுடன் உருவாக்கபட்ட பல்கலைகழகம் இன்று இப்படியாயிற்று

அங்கு பெரும் சிக்கல் ஏதுமில்லை, மாத வாடகையினை 10 ரூபாயில் இருந்து ஆம் அங்கு வாடகையே அவ்வளவுதான் 300 ரூபாய் என உயர்த்துகின்றார்கள்

இதை கட்டமாட்டார்களாம், பெருகிவிட்ட செலவுகளில் கொஞ்சமும் ஏற்கமாட்டார்களாம்

உணவுக்கான டெப்பாசிட் தொகையினை அதிகரித்தால் போராடுவார்களாம்

அது நேரு பெயர் கழகம்தான் ஆனால் நேருகால சலுகை விலையிலே தொடர்வோம் என்றால் எப்படி?

அவனவன் படிக்க வழியின்றி தவிக்கும் தேசத்தில் அரசியல் கைகூலிகளாகிவிட்ட அம்மாணவ கும்பலை அடித்துவிரட்டிவிட்டு வேறு மாணவருக்கு வாய்பளிக்கலாம்

இக்கும்பல் படித்துவந்தாலும் நாட்டுக்கு விரோதமாகவே செயல்படும், ஒவ்வொரு மாணவனுக்கும் அரசு 60 ஆயிரம் ரூபாய் செலவழித்தாலும் அதை நினைத்து பார்ப்பதில்லை

இந்த போராட்டம் தனியார் பல்கலைகழகம், விடுதிகளில் சாத்தியம் என கருதுகின்றீர்கள்? முதல் நாளே சான்றிதழை கிழித்து அனுப்பிவிடுவார்கள்

அரசு கழகம் என்றால் இஷ்டத்துக்கு ஆடுவதா?

பொறுப்பில்லா இம்மாணவர்களை உடனே விரட்டிவிட வேண்டும் , பொறுப்பில்லா இப்பதர்கள் விளையபோவதில்லை, களை எடுப்பும் பதரை வீசி எறிவதுமே சரி..