தெரியாமல் சிக்கி கொண்டோமோ என தவிப்பதும் நிஜம்

தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்திலா நெறிகட்டும் என்பார்கள்இதோ கட்டியிருக்கின்றது, முரசொலிக்கு வந்த சிக்கலை சிரமேற்கொண்டு தாங்குகின்றது நக்கீரன்ஸ்டாலின் மிசாவில் கைதானார் என முரசொலி சொல்லாமல் நக்கீரன் சொல்கின்றது, கலைஞர் எழுதிய கடிதமும், சிறையில் ஸ்டாலின் சாட்சியாக நின்ற ஆதாரத்தையும் அது சொல்கின்றதுஇதை முரசொலி மற்றும் கலைஞர் டிவி சொல்லாமல் நக்கீரன் ஏன் சொல்கின்றது?விஷயம் இல்லாமில்லைஅதாவது விஷயம் உண்மை இல்லை என்றால் சந்திசிரித்துவிடும் என்பதால் திமுகவின் அதிகார பூர்வ ஏடுகள் அதை தவிர்க்கின்றனஆம் நக்கீரனின் செய்தியில் சிறையில் நடந்த சில குற்றங்களுக்கு ஸ்டாலின் சாட்சியாக விசாரிக்கபட்டிருக்கின்றார்ஆம் ஸ்டாலின் சிறையில் இருந்தது நிஜம், ஆனால் மிசா கைதியாக இருந்தாரா என்பதுதான் கேள்வி, நக்கீரனோ அவர் சாட்சியாக நின்றார் ஆனால் எந்த வழக்கில் கைதானார் என்பது எமக்கு தெரியாது என நழுவுகின்றதுஇப்படி சிக்கல் வரும் என தெரிந்துதான் பந்தை நக்கீரன் பக்கம் திருப்பிவிட்டது திமுக, நக்கீரன் பழி சுமக்கின்றதுநக்கீரன் ஊழியருக்கு சம்பளம் போடவில்லை என்பதும் போனஸ் கொடுக்கவில்லை என்பதும் கடந்தமாத செய்திகள்இதற்குமேல் நீங்களே எல்லா விஷயத்தினையும் பொருத்திபாருங்கள் அவ்வளவுதான்நக்கீரன் மட்டுமல்ல திமுகவின் அல்லக்கைகள் அனைத்துமே இந்த சிலுவையினை சுமக்கின்றன‌எல்லாம் ஸ்டாலின் சிறையில் இருந்ததை சொல்கின்றன, அது மிசா காலம் என்பதை சொல்கின்றன,ஆனால் ஸ்டாலின்மிசா சட்டத்தின் கீழ்தான் கைதானார் என்பதை நிரூபிக்கமுடியாமல் திணறுகின்றன‌இன்னொரு கடிதம் சென்னை மத்திய சிறையில் இருந்து கலைஞர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதமாம்
அதில் ஸ்டாலில் 1976ல் மிசா கைதியாக இருந்ததை சொல்கின்றாராம்மத்திய சிறைக்கும் கோபாலபுரத்துக்கும் இடையில் 7 கடல் இருப்பதால் கடிதம் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும், கருணாநிதியும் பல்லாண்டுகள் சிறையில் இருந்தார்அதிலும் கருணாநிதி மிசா கைதி என சொல்கின்றாரே தவிர எதற்காக மிசாவில் கைதானார் என சொல்லவே இல்லை என்பதுதான் சோகம்..இன்னமும் வலுவான ஆதாரம் கிடைக்காமல் திமுக திணறுவது நிஜம் , தெரியாமல் சிக்கி கொண்டோமோ என தவிப்பதும் நிஜம்இதை சொன்னதால் நீ இரண்டாம் மாரிதாஸ், மதனின் முகமூடி , நாக்பூரின் அடிமை என நம்மை அவர்கள் திட்டபோவதும் நிஜம்