அந்த கடிதம் எழுதபட்டது உண்மை

அந்த கடிதம் எழுதபட்டது உண்மை, அதில் இருப்பது கலைஞரின் கையெழுத்தேஅது 1977ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்பொழுது மிசா முடிந்து தமிழக தேர்தலும் முடிந்து ராம்சந்தர் முதல்வராயிருந்தார்காமராஜரையே விரட்டிய நான் ராம்சந்தரை விடுவேனா என வரிந்துகட்டிய கருணாநிதி ஒரு பெரும் போராட்டம் நடத்தினார், கொஞ்சமும் யோசிக்கா ராமசந்திரன் நான் காமராஜர் போல நல்லவன் இல்லை என் ஆட்சியில் வாலாட்டினால் இதுதான் கதி என சட்டென பிடித்து உள்ளே போட்டார்அந்த கைது நடக்கும் என கருணாநிதி எதிர்பார்க்கவில்லை(இருவர் படத்தில் இக்காட்சி வரும்)அப்பொழுது எழுதபட்டதுதான் இக்கடிதம்(இக்கடிதத்தின் உண்மை தன்மையினை ஏற்றுகொள்கின்றோம்,உதயநிதி பிறந்த மறுநாள் எழுதபட்டிருக்கின்றது, துர்கா ஸ்டாலினை ஷாந்தா என்றுதான் அப்பொழுது அழைப்பார்கள், ஆவணத்திலும் ஷாந்தா எனும் துர்கா என்றுதான் பெயர் உண்டு)ஆனால் அப்பொழுது மாதகணக்கில் எல்லாம் கருணாநிதி சிறையில் இல்லை, சம்பிரதாய எச்சரிக்கைக்கு பின் விடுவிக்கபட்டார்அதற்குள் அதுவும் சென்னையில் இருக்கும் சிறையில் இருந்து சென்னையில் இருக்கும் மகனுக்கு ஏன் கடிதம்?மத்திய சிறைக்கும் கோபால புரத்துக்கும் இடையில் பெரும் மலையும், கடலும் ,பெரும் தொலைவு எல்லாம் இல்லைபின்னரும் ஏன் கடிதம்?ஒருவேளை தான் கைதுசெய்யபட்டது மகனுக்கு தெரிந்திருக்காது காரணம் அவன் பத்திரிகையோ ரேடியோவோ பார்ப்பவனும் அல்ல , முரசொலி கட வாசிப்பவனுமல்ல, வீட்டில் தங்குபவனும் அல்ல, கட்சிக்காரனுடன் பழகுபவனும் அல்ல அதனால் கடிதம் எழுதுவதை தவிர வேறு வழி இல்லை என முடிவு செய்திருப்பாரோ?நடக்கும் காட்சிகளை கண்டால் அப்படித்தான் யூகிக்க முடிகின்றதுஇந்த கோணத்தில் யோசியுங்கள், உங்களின் எல்லா சந்தேகமும் பறந்தே போகும்…