இதற்கு மேலும் என்ன ஆதாரம் தர முடியும்?

அந்த கடிதம் கலைஞர் கருணாநிதி எழுதியது என்பதற்கு மகா முக்கியமான ஆதாரம் தருகின்றோம்ஆம், அதில் ஆங்கில நாட்காட்டிபடி வருடமும் மாதமும் தேதியும் சொல்லபட்டிருக்கின்றது, திருவள்ளுவர் ஆண்டோ தமிழ் மாதமோ சொல்லபடவில்லைஇதுதான் அது கலைஞர் கருணாநிதியின் கடிதம் என்பதற்கு பெரும் ஆதாரம்ஆம் அவர் வள்ளுவன் ஆண்டு, தைமாதம் தமிழ்புத்தாண்டு என தமிழர்களைத்தான் குழப்புவார் ஆனால் தன் பிறந்தநாள், பெரியார் நாள், அண்ணா பிறந்தநாள்,கட்சி தொடங்கிய நாள் என எல்லாவற்றையும் ஆங்கில நாட்காட்டி படிதான் செய்வார்தமிழ்நாட்காட்டி பக்கமே வரமாட்டார், அவரின் இருமொழி கொள்கை அப்படி. எழுத ஒரு மொழி காலண்டருக்கு ஒரு மொழிஇன்னொரு ஆதாரம் தருகின்றோம், அவர் தமிழறிஞர்தான் வடமொழி எதிரிதான்,ஆனால் ஸ் எனும் வார்த்தைமட்டும் வடமொழியில் அவருக்கு பிடித்தமான வார்த்தை, அதை அவர் மட்டும் பயன்படுத்த திமுக பொதுகுழு அனுமதி வழங்கியிருந்தது அதனால் “ஸ்”டாலின் என எழுதியிருக்கின்றார்ஆக இனி அது கருணாநிதியின் கடிதம் என்பதை நம்ப உங்களுக்கு மிக எளிதாக இருக்கும் அல்லவா?இதற்கு மேலும் என்ன ஆதாரம் தர முடியும்?