வென்றுவா உலகை வென்று வா..
Brazil , Russia, India, China, South Africa ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியது BRICS அமைப்பு,
அதாவது ஒவ்வொரு கண்டத்தின் வளரும் முக்கிய நாடுகள் ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது. தங்களுக்குள்ளே உதவி வளருவது, உலக பொருளாதாரத்தினை ஒத்துழைப்புடன் எதிர்கொள்வது,
தங்களுக்குள்ளே பொதுபணம், டாலர் மற்றும் யுரோவினை விரட்டுவது, பல்வேறு ஒப்பந்தம் மூலம் மேல்நாட்டு கட்டுபாடுகளை எதிர்கொள்வது தங்களுக்குள்ளே பொது வங்கி ஏற்படுத்துவது என பல விஷயம் அதில் உண்டு
ஆசியாவில் இந்தியா,சைனா ஆகிய பெரும் நாடுகளும் ஐரோப்பாவில் ரஷ்யாவும் ஆப்ரிக்காவில் தென்னாபிரிக்காவும், தென் அமெரிக்க கண்டத்தில் பிரேசிலும் உண்டு
இந்த BRICS நாடுகளின் கூட்டம் பிரேசிலில் நடக்கின்றது, இதில் கலந்து கொள்ள மோடி சென்றிருக்கின்றார்
எஸ் 400 திட்டத்துக்கு 6 ஆயிரம் கோடி கொடுக்கபட்ட நிலையில் விரைவில் ரஷ்யா அதை ஒப்படைக்கும் நிலையில் மோடி புட்டீன் சந்திப்பு எதிர்பார்க்கபடுகின்றது, இது போக ஏக பொருளாதார விஷயங்கள் விவாதிக்கபடும்
மாமல்லபுரத்தை அடுத்து ஜின்பெங்கையும் மோடி சந்திக்கும் நேரமிது, ஏசியான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என சீனாவுக்கு செக் வைத்துவிட்டு, வியட்நாமை சீனாவுக்கு எதிராக லேசாக ஆடவிட்ட பின் நடக்கும் சந்திப்பு இது
மோடி, புட்டீன், ஜின்பெங் என மகா முக்கிய சக்திகள் கூடும் இடம் என்பதால் அது கவனம் பெறுகின்றது, இந்த கூட்டத்தில் மதுரை ஜல்லிகட்டில் புட்டீன் பங்கேற்பது பற்றி எல்லாம் விவாதிக்கபடாது, அதை விட மகா முக்கிய விஷயங்கள் எல்லாம் உண்டு
மோடி நேற்றே பிரேசில் கிளம்பிவிட்டார், நாம் இப்படி வாழ்த்தலாம்
“சென்று வா மகனே சென்றுவா, வென்றுவா உலகை வென்று வா..”
