தமிழ்நாட்டின் சோக தலைவிதி

அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தன் மனைவியினை கொன்றிருக்கின்றார், விஷயம் பரிதாபமானது

அவர்களுக்கு இப்பொழுதுதான் திருமணம் நடந்தது, அப்பெண் ஹிர்திக் ரோஷனின் ரசிகையாம், இது கணவனுக்கு பிடிக்கவில்லை

அவன் படம் பார்க்காதே என கணவன் தடுத்தாலும் அம்மணி அதன் போக்கில் பார்த்துகொண்டே இருந்திருக்கின்றது, ஆத்திரமுற்ற கணவன் கொன்றே விட்டான்

வெறும் சாதாரண விஷயத்துக்கு கொலையே செய்துவிட்டான் அந்த படுபாவி, நிச்சயம் அப்பெண் கொஞ்சநாளில் குடும்ப பொறுப்பு குழந்தை பொறுப்பு கூடும் பொழுது அதில் இருந்து விடுபட்டிருப்பாள்

முதலில் மிக விரும்பபடும் விஷயம் எதுவும் பின்னொரு நாளில் வெறுத்துபோகும் என்பது மானிட விதி, அது தெரியாமல் கொன்றுவிட்டான் சண்டாளன்

இந்த இடத்தில் பாகம்பிரியாளை கை கூப்பிவணங்கலாம், முன்னொரு காலத்தில் நாம் குஷ்பு சங்கம் நடத்திய பொழுது என்னை அவள் பலமுறை கொன்றிருக்க வேண்டும், விட்டுவிட்டாள்

எனினும் இப்படி தமிழக கணவன்கள் 1960களில் 70களில் இப்படி மனைவியரை அந்த நடிகனின் படத்தை பார்க்காதே என தடுத்திருந்தால் தமிழக வரலாறே மாறியிருக்கும்

ஆம், அந்நாளைய நடிகர் ராம்சந்தருக்கு பெண்களிடத்தில் அவ்வளவு வரவேற்பு இருந்தது, அவர் படம் பார்க்க செல்வதை தடுத்தற்காக தாலியினை கழற்றி வீசிய ரசிகைகள் தமிழ்நாட்டில் உண்டு

அந்த தாய்குலமே ராம்சந்தருக்காக திமுகவினை வெல்ல வைத்தது, அந்த தாய்குலமே ராம்சந்தருக்காக கருணாநிதியினை சாகும்வரை கதறவிட்டது

மொத்தத்தில் தமிழ்நாட்டை நாசமாக்கிவிட்டது

( ஆக ஹிர்திக் ரோஷன் ஒரு குடும்பத்தை அழித்துவிட்டார், ஆனால் ராம்சந்தர்?. வேண்டாம் அதை நாமே சொல்ல வேண்டாம்

எனினும் தானே உருவாக்கிய திமுகவினை தானே அழிக்க முயன்றார் என்பதுவரை அவருக்கு மன்னிப்பு உண்டு.)

ஆக இந்த ஆசாமி போல அன்றே தமிழக ஆசாமிக்கள் இருந்திருக்கவில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் சோக தலைவிதி.