இம்ரான்கானை கிள்ளிவிடுவது மோடி ஸ்டைல்

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அழுதுகொண்டிருக்கும் இம்ரான்கானை கிள்ளிவிடுவது மோடி ஸ்டைல்அப்படி கர்தார்பூர் பாதை திறப்பிலும் இம்ரான் கன்னத்தில் கிள்ளிவிட்டார்அதாவது பாதையினை திறந்துவிட்ட இம்ரான்கான் நியாசிக்கு நன்றி , நியாசிக்கு நன்றி என அழுத்தி சொல்லிவிட்டு வந்துவிட்டார்இம்ரான்கானின் முழுபெயர் இம்ரான்கான் நியாசி என்றாலும் பல்லைகடித்து கொண்டிருக்கின்றது பாகிஸ்தானும் இம்ரான்கானும்காரணம் நியாசி என்பது பாகிஸ்தானியர்களால் இந்தியா உச்சரிக்கும்பொழுது தாங்கமுடியா பெயர்ஆம், 1971ல் இந்திய வங்கபோரில் பாகிஸ்தானின் தளபதி நியாசி, அவரை முழங்காலில் நிறுத்தி சரணடைய வைத்தது இந்தியா, 1 லட்சம் பேரோடு முட்டிபோட்ட நியாசி தன் துப்பாக்கியினை இந்தியாவிடம் கொடுத்து சரணடைந்தார்அதிலிருந்து இந்தியாவிடம் சரணடைந்த நியாசி என்ற வரி பிரபலம், பாகிஸ்தானுக்கு அது அவமானம்இப்பொழுது முதலில் அடம்பிடித்துவிட்டு பின் கர்தார்பூர் பாதையினை திறந்துவிட்ட இம்ரான்கானை அவரின் பெயரிலே நியாசி என அழைத்து அழ வைத்துவிட்டார் மோடிஇப்பொழுதெல்லாம் ராஜதந்திரத்திலும் அரசியல் ரீதியான கிண்டலிலும் மிகவும் தேர்ந்துவிட்டார் மோடி