சரத் பொன்சேகாவின் வாக்கு மகா மகா சத்தியமானது
இலங்கையில் வரும் 16ம் தேதி தேர்தல் வரிந்துகட்டி நிற்கின்றார்கள் இருவர்
ஒருவர் கோத்தபாய ராஜபக்சே இன்னொருவர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாச
இருவரும் இலங்கைக்கு பெரும் சேவையினை எப்படி ஆற்றினார்கள் என்றால் புலி அந்த வாய்ப்பை கொடுத்தது, பிரேமதாச புலிகளை பக்குவமாய் கையாண்டு இந்தியபடைகளை விரட்டி பின் புலிக்கே இரையான இலங்கை தேசபக்தர்



கோத்பாய புலிகளின் தற்கொலை தாக்குதலிலும் தப்பி பிரபாகரனை சோலிமுடித்ததாக சொல்லும் வித்தகர்
இந்த இருவரையும் தாண்டி இன்னொருவர் களத்தில் உண்டு ஆனால் அவர் கடந்தமுறையே வெற்றியினை தவறவிட்டதால் இனி வாய்ப்பில்லை
அவர் சரத்பொன்சேகா
பொதுவாக தளபதிளின் ராணுவ வெற்றி தேசத்தை மாற்றும், நல்ல தளபதிகள் அதை அரசியலாக்கி அழகாக வெற்றிபெறுவார்கள்
அதன் வரலாற்று சாட்சிகள் ஜூலியஸ் சீசரும், நெப்போலியனும் , மைசூரின் ஹைதர் அலியுமே
ஹிட்லரும் அந்த சாயலே, அவன் போர் வியூகத்தில் தன்னிகரற்ற தளபதியாயிருந்தான்..
ஆம் அவர்கள் சாதாரண தளபதிகள், ஆனால் களத்தின் வெற்றிபுகழை கொண்டு , உயிரினை துச்சமாக கருதி எதிரியினை ஓட அடித்த நாங்கள் நாட்டை ஆளமாட்டோமா? என ஆட்சியாளர்களை அடித்துவிரட்டிவிட்டு வந்து அமர்வார்கள்
அந்நாடுகள் அதன் பின் உச்சம் தொடும்
ரோமும், பிரான்சும், மைசூர் சமஸ்தானமும் அதன் பொற்காலங்களில் இருந்தது இப்படித்தான், இஸ்ரேலில் அது வித்தியாசமாக நடக்கும் ராணுவ தளபதிகள் மக்கள் முன்னால் நிற்பார்கள் மக்கள் அவர்களை தேர்ந்தெடுப்பார்கள்
( பாகிஸ்தானில் இது தலைகீழாக நடக்கும், அவ்வளவு திறமை இல்லா தளபதிகள் ஆட்சியினை கைபற்றுவார்கள் பின் அவர்களே தலைதெறிக்க ஓடுவார்கள் )
இப்படி ஒரு தளபதி பொன்சேகா, அவர் அமெரிக்க படிப்பு மகா ஆற்றலான வீரம், அறிவு என கலந்து கட்டிய வடிவம். அவர் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என முதலிலே உணர்ந்த புலிகள் வழக்கம் போல் மனிதவெடிகுண்டு அனுப்பினர்
ராணுவ வீரனின் கர்ப்பினி மனைவி என குண்டுகட்டி சென்ற புலிகுண்டு அவரின் காரில் விழுந்து வெடித்தது, அது பாதுகாப்பான கார் எனினும் பொன்சேகா படுகாயமடைந்து சாவின் எல்லைக்கு சென்று திரும்பினார்
கூடவே புலிகளை ஒழித்துகட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தது, அந்த வைராக்கியத்தை கச்சிதமாக பயன்படுத்தினார் ராஜபக்சே
தன் பலத்த முகாமில் மனிதவெடிகுண்டு எப்படி வந்தது என யோசித்த பொன்சேகா தன் ராணுவத்தில் புலிகளின் கைகூலி இருப்பதை கண்டார், இதென்ன்ன தமிழக அரசியல்வாதிகள் போல் இங்கும் பணம்கொடுத்தால் கூலியாள் கிடைப்பார்கள் போல என உணர்ந்த அவர் அந்த கருப்பு ஆடுகளை களையெடுத்தார்
அந்த கருப்பு ஆடுகள் களையெடுக்கபட்டபின் உண்மையான யுத்தத்தை சந்தித்த புலி படு கேவலமாக ஒழிந்தது
அந்த கொடும் புலிகளை, இந்திய ராணுவமே நெருங்கமுடியா புலியினை ஒழித்த பொன்சேகா கடும் புகழில் இருந்தார், இலங்கையின் அதிபராகும் வாய்ப்பு அவருக்கே இருந்தது,ஆனால் அரசியல்வாதி காரியம் முடிந்ததும் கடவுளையே விரட்டுபவன் அல்லவா?
ராஜபக்சேயின் அரசியல் ஆட்டத்தில் சிக்கிய பொன்சேகா வாய்ப்பினை தவறவிட்டார்
இதே காட்சி இந்தியாவில் உண்டு, இந்திராவுக்கும் மானெக்சா எனும் மாவீரனுக்கும் நடந்த மறைமுக யுத்தம் அது
நிச்சயம் வங்கபோரின் நாயகன் மானெக்சா, அவர்தான் அந்த மாபெரும் யுத்தத்தை அமெரிககவின் மறைமுக தலையீடு இருந்த யுத்தத்தை வெற்றிகரமாக முடித்தார்
ஹாஜி நீர்மூழ்கி கப்பலை நொறுக்கியதும், 1 லட்சம் பாகிஸ்தானியரை சிறைபிடித்ததும், ஐ.எஸ்.எஸ் விக்ராந்த் கப்பலை கொண்டு அவர் ஆடிய ஆட்டங்கெலெல்லாம் மகா சுவாரஸ்யமானவை
நிச்சயம் இந்திய வரலாற்றின் மாபெரும் அதிசயம் அந்த மானெக்சா, அந்த வீரமும் தியாகமும் அர்பணிப்பும் அப்படியானது
வங்கபோரின் பெருவெற்றி 1971ன் டிசம்பரில் தொடங்கி 1972 முதல் பெரும் உச்சத்தில் இருந்தார் மானெக்சா, அவர் தேர்தலில் நின்றால் அவரே பிரதமராகியிருப்பார்
காங்கிரஸும் ஜனதாவும் அவரை கண்டு அஞ்சியது, அவர் நினைத்திருந்தால் ஆட்சியினை பிடித்திருக்கலாம்
சஞ்சய் காந்தியின் மகா மோசமான ஆட்டம் இன்றைய அமித்ஷாவே பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தது, சஞ்சயினை ஒப்பிடும்பொழுது அமித்ஷா தெய்வம் அல்ல தெய்வத்தின் தெய்வம்
அந்த கொடும் காலகட்டத்தில் மானெக்சா களமிறங்கும் நேரம் வந்தபொழுதுதான் இந்திரா மிசா என இன்னபிற ஆட்டங்களை ஆரம்பித்தார்
அந்நிய சக்திகள் நாட்டை குறிவைக்கின்றன என அவர் மறைமுகமாக சொன்னது மானெக்ஷாவினையே
ஆனால் மானெக்சா ஒரு இடத்திலும் பதில் சொல்லவில்லை, நெருக்கடி நிலைக்கு பின்னும் இந்திரா பிரதமராவதை பார்த்துகொண்டே இருந்தார், அரசியலுக்கு வரவில்லை
1972லே அவர் அரசியலுக்கு வந்திருந்தால் காட்சிகள் மாறியிருக்கும், ஆனால் அவர் இந்திய யதார்த்தத்தை உணர்ந்து, அரசியலுக்கு தான் வந்தாலும் ராணுவபாணியில் ஆளவேண்டி இருக்கும், தனக்கு பின்னால் வருபவன் எப்படி இருப்பானோ தெரியாது, தவறான வழிகாட்டலில் இறங்கிவிட கூடாது என்பதில் கவனமாய் இருந்தார்
அந்த கவனம் அண்ணா, கருணாநிதி , ஜெயா, ராம்சந்தர் என யாருக்குமில்லை, எல்லாம் ஆசை, பேராசை, அந்த விளைவினை நாம் அனுபவிக்கின்றோம்
ஆனால் அந்த பெருமகன் மானெக்சாவுக்கு பொறுப்பு இருந்தது அவன் கவனமாய் இருந்தான்
இலங்கை தேர்தல் காட்சிகளை நினைக்கும் பொழுதெல்லாம் பொன்சேகாவினை நினைக்கும் பொழதெல்லாம் அந்த மானெக்ச்சாவும் அவர் நினைவும் வரும்
தன் கடைசி காலத்தில் அந்த அதிசய மனிதன் ஊட்டியில்தான் இருந்தார், 2008ல்தான் இருந்தார்
எல்லையில் உலகமே வியக்கும் வண்ணம் பெரும் யுத்தம் நடத்திய அந்த பீல்டு மார்ஷல் மானெக்சா, ஊட்டியில் இருந்தபடி தமிழக தளபதி, இளைய தளபதி, புதிய தளபதி எல்லாம் பார்த்த்து, புரட்சி தலைவன் தலைவி எல்லாம் பார்த்து சிரித்து சிரித்தே தன் முதுமையினை கழித்திருப்பான்
தேசத்தின் மாபெரும் அடையாளமான அம்மாமனிதனுக்கு இப்படி தளபதி, புரட்சி தலைவன் என கோமாளிகளை காட்டி தமிழகம் நன்றிகடன் தீர்த்திருக்கின்றது என்பதுதான் சோகம்
தமிழக அரசியல்வாதிகள் முழு கோமாளிகள் என அன்றே சொன்ன சரத் பொன்சேகாவின் வாக்கு மகா மகா சத்தியமானது என்பதை காலம் காட்டிகொண்டிருக்கின்றது.
ஆம் அவன் யுத்தம் என்றால் என்ன என்பதை தன் சாவின் நுனிவரை சென்று பார்த்து வந்து பின் சண்டையிட்டு வென்ற மாவீரனாய், பிரசித்திபெற்ற தளபதியாய் இருந்தான்.