ஜிகாத் இஸ்லாமிய போராளிகளுடன் போர் தொடங்கியிருகின்றது இஸ்ரேல்
ஜிகாத் இஸ்லாமிய போராளிகளுடன் போர் தொடங்கியிருகின்றது இஸ்ரேல், ஜிகாதிகள் மிக கடுமையான ஏவுகனை தாக்குதலை இஸ்ரேல் மேல் தொடுத்திருக்கின்றார்கள், ஜாபா நகரம் அவர்களின் குறியாய் இருக்கின்றது
ஆனால் அட்டகாசமாக இஸ்ரேலிய அயர்ன் டோம் சிஸ்டம் 90% ஏவுகனைகளை அடித்து வீழ்த்துகின்றது, “நன்றி போராளிஸ் நாங்கள் புது பயிற்சியினை பெறுகின்றோம்” என்ற அளவில் மிக மிக நேர்த்தியாக ஆடுகின்றார்கள்
மழைபோல் பொழியும் ராக்கெட்டுகளை குடை போல் தடுக்கின்றது அயர்ன் டோம் சிஸ்டம்
பொதுவாக ஏவுகனைகள் திரும்பாது அல்லது திருப்பமுடியாது, வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல் நேராக செல்லும், இலக்கு தவறினால் அவ்வளவுதான்
ஆனால் அயர்ன் டோமின் ராக்கெட்டுகள் வானில் பறக்கும் பாம்பாக நெளிகின்றன திரும்பி திரும்பி வளைந்து நெளிந்து எதிரியின் ராக்கெட்டுகளை வானிலே துரத்தி அடித்து சிதறடிக்கின்றன
உலகம் ஆச்சரியத்தில் வாயினை பிளந்து காட்சிகளை பார்த்துகொண்டிருக்கின்றது, மாபெரும் மாயாஜாலத்தை நிகழ்த்தி கொண்டிருக்கின்றது இஸ்ரேல்

