பழம் செல்வங்களையும் அறிவு புதையலையும் மீட்க வேண்டியது தமிழர் கடமை
தமிழை காக்க வந்த இயக்கம் அது, திமுக ஒன்றே தமிழை காத்தது வளர்த்தது என ஏக அழிச்சாட்டியம்
ஏதும் சொன்னால் திமுக வளர்த்த இலக்கியம் தெரியுமா? இலக்கணம் தெரியுமா? திமுக எழுத்தாளன் தெரியுமா என வரிந்து கட்டுவார்கள்
சரி ஒரு திமுகாரனுக்காவது தமிழ்நாட்டின் பண்டைய ஓலைசுவடியில் ஒருவரி வாசிக்க தெரியுமா என கேளுங்கள், அவனுக்கு தெரியாது
அட 1930களின் நிலபட்டாவினை கூட வாசிக்க இங்கு யாருமில்லை, அவ்வளவு ஏன் கருணாநிதி அண்ணாவின் கையெழுத்துபிரதியே திமுககாரனுக்கு வாசிக்க தெரியாது
அந்த அளவுக்குத்தான் தமிழை வளர்த்திருக்கின்றார்கள், ஏன் அப்படி செய்தார்கள்?
பண்டைய சுவடி முழுக்க மதமும் அறிவிலும் கலந்த தமிழாக வரும், அதை வளர்க்க முயற்சித்தால் தமிழனின் இந்து தொடர்பும் , அந்த பழைய அறிவார்ந்த தமிழன் இந்துவாய் இருந்தான் என்பதை உணர வேண்டியது வரும்
தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் உண்டான தொடர்பு வரும், சமஸ்கிருதம் படிக்கலாமே எனும் உணர்வு வரும், இன்னும் என்னவெல்லாமோ வரும்
விடுவார்களா?
நாங்கள் சொன்னதே தமிழ், நாங்கள் வளர்த்ததே இலக்கியம் என பண்டைய தமிழ் மேலும், ஓலை சுவடி தமிழ்மேலும் கல்லறை கட்டி திராவிட மேடையும் பகுத்தறிவு மாளிகையினையும் அமைத்திருக்கின்றது அக்கோஷ்டி
அதை இடித்து தகர்த்து பழம் செல்வங்களையும் அறிவு புதையலையும் மீட்க வேண்டியது தமிழர் கடமை, அதுதான் உண்மையான பகுத்தறிவு
