மிசாவில் விமர்சிக்கபடுவதால் மனம் நொந்துவிட்டாரம்
முக ஸ்டாலின் தான் மிசாவில் விமர்சிக்கபடுவதால் மனம் நொந்துவிட்டாரம், மனம் நொந்து தன் தந்தையின் கருப்பு கண்ணாடியினை அணிந்துவந்து அர்ச்சிக்க தொடங்கிவிட்டார்
கருப்பு கண்ணாடி அணிந்தவரெல்லாம் கருணாநிதி ஆக முடியாது என்பது வேறுவிஷயம்
“கேடுகெட்ட ஜென்மங்கள்” என அவர் பொதுவாக சொன்னாலும் அது அந்த மதனையும், மாரிதாஸையும் குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்
ஒரு தலைவர் இப்படி நிதானம் இழக்க கூடாது, அதுவும் மிக மிக சாமான்யர்களான மதனையும் , மாரிதாஸையும் தனக்கு சமமாக எண்ணி பேசுவது என்பது அரசியல் ரீதியாக சரி அல்ல
உலகம் ஆயிரம் விமர்சனங்களை வைக்கும், ஒன்று எதிர்கொள்ள வேண்டும் இல்லை கடக்க வேண்டும்
மாறாக கேடுகெட்ட ஜென்மங்கள் என பொங்குவது சரியல்ல..
பதற்றம் ஸ்டாலினின் இயல்பு குணம், அது அப்பட்டமாக வெளிபடுகின்றது. மனிதர் ஆதாரம் இல்லை என்றால் எல்லோரையும் போல என்னிடமும் இல்லை, மிசா என்பது வாரண்ட் இன்றி கைதுகள் நடந்த காலம் என சொல்லிவிட்டு நகரலாம்
இதுவே கருணாநிதி என்றால் சிக்கலை எப்படி திருப்புவார் தெரியுமா?

“ஆம் நான் அன்றே சிறை சென்றேன் அன்று மட்டுமல்ல என் 19ம் வயதிலே சிறைக்கு சென்றேன், சிறை எனக்கு மாளிகை, ஞானம் தந்த அரசமரத்தடி, இரண்டாம் தாய்மடி
அந்த சிறைக்கு அஞ்சா கருணாநிதி இப்பொழுதும் அப்படியேத்தான் இருக்கின்றான், இந்த அரசு மிசா கொண்டுவருமானால் அதிலும் சிறை செல்ல இந்த தள்ளா வயதிலும் தயாராக இருக்கின்றான் இந்த கருணாநிதி”
அத்தோடா விடுவார்?
“தமிழர்களே தமிழர்களே நான் இறுகினாலும் பாறைகல்லாக இறுகுவேன், என்னை தூக்கி வீசி நீங்கள் சிறைகளை நொறுக்கலாம், உடைந்துவிட மாட்டேன்”
இந்த திமுக தலமையிடம் இந்த சுவாரஸ்யமெல்லாம் சுட்டுபோட்டாலும் வராது, தன் வழக்கமான சொதப்பலை ஸ்டாலின் இதிலும் சொதப்பியிருக்கின்றார் எப்படி?
வரிகளை கவனியுங்கள்..
“கேடுகெட்ட ஜென்மங்கள்”
அய்யா , “ஜென்மம்” என்பது சமஸ்கிருத வார்த்தை தமிழ்வார்த்தை அல்ல
அந்த கெடுகெட்ட ஜென்மங்கள் எப்படியும் போகட்டும் நீங்கள் முதலில் சுத்த தமிழ் படித்துவிட்டு வாருங்கள்
தமிழை காக்க வந்த தலைவன் சமஸ்கிருதத்தில் பேசினால் எப்படி?