இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது

இப்பொழுது நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லை தகறாறு முட்டி கொண்டிருக்கின்றது, இது பெரும் சிக்கலை உருவாக்குகின்றது

இந்தியாவின் வட எல்லையாக இமயமலையில் படர்ந்திருக்கும் நாடு நேபாளம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உலகின் ஒரே ஒரு இந்துநாடாக அது அரணாக இருந்தது, எதையுமே சரியாக செய்ய தெரியாத காங்கிரஸ் அரசு ஈழத்தில் குழப்பியது போல் நேபாளத்திலும் குழப்ப, அந்த குழப்பத்தை சீனா மிக சரியாக தன் கம்யூனிஸ்ட் அடிபொடிகள் மூலம் பயன்படுத்தி அங்கு தன் பிடியினை இறுக்கிவிட்டது

பழைய நம்பகமான இந்து நேபாளம் இப்பொழுது இல்லை கம்யூனிஸ்டுகள் எனும் குழப்பவாதிகளின் கூடாரமாகி சீனாவுக்கு ஏவல் வேலை செய்யும் தேசமாயிற்று

இப்பொழுது இந்தியா வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் காலா பாணி எனும் தங்கள் பகுதி சென்றுவிட்டதாகவும் அது தங்கள பகுதி எனவும் வாளை உருவுகின்றது நேப்பால்

அந்த இடம் திபெத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரும் பகுதி, இதுகாலமும் சிக்கல் இல்லை இப்பொழுது மத்திய அரசு இந்தியாவின் புதிய வரைபடைத்தை சொல்லும் பொழுது வருகின்றார்கள்

கலாபாணி என்பது அந்த ஆறும் கிராமமும் கொண்ட பகுதி இந்தியாவின் ஜார்கண்டை ஒட்டி வரும், ஏற்கனவே மதராசிகள் தங்கள் நாட்டை அதாவது பீகார் மற்றும் உபிமக்கள் நேபாளத்தை ஆக்கிரமிக்கின்றார்கள் எனும் சர்ச்சை நடக்கும் நிலையில் இப்பொழுது நேரடியாக இந்தியா ஆக்கிரமிக்கின்றது என்கின்றது நேப்பாள்

இந்தியா அது எங்கள் பகுதிதான், தேவைபட்டால் இதுபற்றி பேசலாம் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது

உண்மையில் அதன் அருகில் ஒரு கணவாய் உண்டு, திங்கர் பாஸ் என்பார்கள், அதை கடந்தால் அப்பக்கம் திபெத்துக்கு அதாவது சீனாவுக்கு செல்லலாம்

இங்குதான் இப்பக்கம் இந்தியாவும் அப்பக்கம் நேபாளத்தை முன்னால் நிறுத்தி பின்னால் சைனாவும் ஆடுகின்றன