இந்திரா சமாதியில் சோனியா அஞ்சலி

இந்திரா சமாதியில் சோனியா அஞ்சலி

இந்திராவோடு இந்திராவின் கொள்கைகளையும் தேசம் புதைத்துவிட்டது, சோனியாவுக்கும் அதில் பங்கு உண்டு

ஆம் இந்தியா ஒரு அதிரடி தலமையினையே விரும்பியது, இந்நாட்டின் எதிர்பார்ப்பு அது. மிசாவினை தாண்டி இந்திரா அசைக்கமுடியா இடத்துக்கு வந்ததும் அப்படித்தான்

ஆனால் சோனியா தடுமாறினார், ஒருவிதமான மென்மையான போக்கை கொண்டிருந்தார், மாநில கட்சிகளின் பிடிக்குள் அடங்கினார்

கருணாநிதி “சோனியா சொக்க தங்கம்” என சொல்லவும் இந்தியாவே அட இந்த ஆளே சோனியாவினை பாராட்டினால் உண்மை என்னவாக இருக்கும் என கலங்கி அத்தோடு காங்கிரஸை மூட்டை கட்டி பரணில் போட்டுவிட்டது

ஆம் இந்திராவின் அதிரடிகளை எதிர்பார்த்து காத்திருந்த இந்தியாவுக்கு சோனியா ஏமாற்றத்தை கொடுத்தார், அந்த இடத்தை மோடி அபாரமாக பிடித்து கொண்டார்

இந்திராவின் சமாதியில் சோனியா அஞ்சலி செலுத்திய காட்சி அதைத்தான் சொல்கின்றது, ஆட்சி ஒன்றுக்காக மாநில அழிச்சாட்டிய கட்சிகளுன் கூட்டனி சலுகை மெத்தனம் மவுனம் என இருந்த காங்கிரஸ் தூக்கி எறியபட்டு புதைக்கபட்டிருக்கின்றது

மாநில கட்சிகளை ஆட்சிக்கு கொண்டுவந்து அவை செய்த அநியாய இமாலய ஊழலை மவுனமாக அனுமதித்த காங்கிரஸ் இன்று தற்கொலை செய்திருக்கின்றது

நாட்டு நலனை இந்திரா பாணியில் முன்னிறுத்தியிருந்தால் இந்த வீழ்ச்சி வந்திருக்காது

இந்திராவோடு காங்கிரஸையும் தகணம் செய்துவிட்டு அதற்கு அஞ்சலியும் செய்கின்றார்கள் அவ்வளவுதான் விஷயம்