முடிந்தால் அதை வாங்கிபோட்டு லாபமாக்க வேண்டியதுதானே?
ஏர் இந்தியாவினை மோடி விற்கின்றார் என ஒரே ஆர்ப்பாட்டம், இதில் எவனாவது ஏர் இந்தியாவில் பயணிப்பவனா அந்நிறுவணத்தை காக்க முயன்றவனா என்றால் இல்லை, பாதி பயலுக்கு ஏர் இந்தியா விமானமே தெரியாது
பாரத் பெட்ரோலியத்து ஊழியர்களின் கவர்னருக்கு நிகரான சம்பளம் பற்றி ஒரு பயலும் பேசமாட்டான்
துபாய் ஏர் ஷோ காற்று வாங்கி கிடக்கின்றது, 2 விமானங்களே விற்கபட்டிருப்பதில் உலக தயாரிப்பு நிறுவணங்களே கதிகலங்கி போய் இருக்கின்றன
தமிழ்நாட்டில் அரசியல் செய்வதை விட மோசமாகிவிட்டது விமான போக்குவரத்து, அவ்வளவு சிரமங்கள், பல நாடுகள் அந்த துறையினையே தலைமுழுகிவிட்டன
உலக நிலவரம் இங்கும் எதிரொலிக்கும் பொழுது ஆளாளுக்கு சத்தம் மட்டும் கேட்கின்றது, அய்யகோ ஏர் இந்தியாவினை விற்கின்றார்கள் என ஒப்பாரி
முடிந்தால் அதை வாங்கிபோட்டு லாபமாக்க வேண்டியதுதானே? செய்யமாட்டான்