இந்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கானது

ஒவ்வொரு மாதத்திலும் அஷ்டமி இந்துக்களுக்கு விஷேஷமானது, அதில் இந்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கானது

கால பைரவர் காவலின் வடிவமாக கருதபடுபவர், சனிக்கே அவர்தான் குரு என்பதால் 12 ராசிக்காரர்களும் சனியின் பிடியில் இருந்து விடுபட அவரை வணங்கலாம் என்கின்றது சோதிட சாஸ்திரம்

கால பைரவர் சிவனின் ருத்ரகோல சாயல், அந்த கால பைரவர் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பெயரில் வணங்கபடுவார், தென்னகத்து சுடலை சாமி கூட அந்த கால பைரவரின் ருத்திரகோல சாயலே..

பொதுவாக கார்த்திகை மாதம் தீமைகளை வேரறுக்கும் அவதாரங்கள் பிறந்த மாதம். முருகன் , கால பைரவர் மற்றும் அய்யபன் வரை கொண்டாடபடும் மாதம்

அவ்வகையில் இன்று இந்துமக்கள் காலபைரவருக்கான சிறப்பு வழிபாட்டை மேற்கொள்கின்றார்கள்

கால பைரவர் எல்லோருக்கும் காவலாய் இருப்பார், அதுவும் எப்படி இருப்பார் என்றால் நாயினை போல காவல் இருப்பார் கலங்காதே என்றது இந்துமதம்

நாயிடம் உள்ள நற்குணங்களில் வாலாட்டி நன்றியாய் இருந்தலும், உயிரை கொடுத்து காத்தலும் குறிப்பிடதக்கவை

இதனால்தான் நாயினை கால பைரவர் என்றே அது அழைத்தது, இன்றும் நாயினை பைரவரின் வடிவம் என சொல்வதன் தத்துவம் அதுவே

நன்றியும் கடும் காவல் பண்பும் கொண்ட நாயினை தெய்வத்தின் இடத்திற்கு உயர்த்தவும் அது தயங்கவில்லை

நாயின் காவலிலும் விசுவாசத்திலும் நன்றியிலும் தெய்வத்தை காண சொன்னது இந்துமதம்

அவர்கள் ஆலயத்தில் வைக்கபடும் ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு இறை தத்துவம் உண்டு, மனிதனை தாண்டி விலங்கிலும் கடவுளின் தன்மையினை கண்ட மதம் அது.

இந்த சாயல் உலகில் எந்த பூமியிலுமில்லை இந்த தர்ம பூமியில் மட்டுமே சாத்தியம்

நேர்மையும் நெஞ்சில் சுத்தமும் பொதுநலமும் கொண்டோர் அழைக்காமலே கால பைரவர் வருவார் என்கின்றது சாஸ்திரம், நீதி கிடைக்காமல் தவிப்போர் கால பைரவரிடம் முறையிட்டால் அது நடக்கும் என்பது ஐதீகம்

கால பைரவரின் அம்சமான சுடலைமாடனிடம் இப்படி முறையிடும் வழக்கம் தென்னாட்டில் இன்றும் உண்டு

காசி கால பைரவரின் மகா முக்கிய ஸ்தலமாகும், காசி எனும் புண்ணிய நகரை அவர்தான் காத்து கொண்டிருக்கின்றார் என்பது ஐதீகம்.

காசியினை காக்கும் எல்லோருக்கும் கால பைரவரின் கடாட்சம் கிடைக்கும் என்பார்கள், மோடி காசிக்கு பல நற்காரியங்களை செய்திருக்கின்றார் இன்னமும் செய்வார்

அந்த கடாட்சம் மோடிக்கும் கிடைத்திருக்கின்றது,

இந்நாட்டை காத்து நிற்கும் கால பைரவரின் சாயலான‌ மோடிக்கு அந்த பகவான் எல்லா நலமும் வளமும் காவலும் அருளட்டும்