பழனிச்சாமி திரையுலகத்தில் இருந்து வராத முதல் முதல்வர்
பழனிச்சாமி திரையுலகத்தில் இருந்து வராத முதல் முதல்வர், அதாவது காமராஜர் காலத்துக்கு பின் அந்த அதிசயத்தை செய்தவர் என்பதில் திரையுலகம் கடும் அப்செட்டில் இருக்கின்றது
முன்பு தங்க தாரகைக்கு விழா, பாச தலைவனுக்கு பாராட்டுவிழா என நடத்தி அடிக்கடி குளிரவைப்பார்கள்
இப்பொழுது வாய்ப்புமில்லை, அரசும் திரையுலகம் மேல் ஒரு கண் அல்ல காலையும் வைத்திருப்பது தெரிகின்றது
இதனால் தமிழக திரையுலகம் தங்கள் பிதாமகன் கருணாநிதி வழியில் தமிழக அரசியலை மறுபடியும் கட்டுபடுத்த முயல்கின்றது
ரஜினி, கமல், இந்த சந்திரசேகர் எல்லாம் ஒருமாதிரி பேசிதிரிவது அப்படித்தான் தெரிகின்றது
அரசுவிடுவதாக இல்லை, இதை திமுகவும் மவுனமாக ரசிக்கின்றது
ஆக இனி முக்கோண போட்டி தமிழகத்தில் நடக்கலாம் போல தெரிகின்றது
எம்மை பொறுத்தவரை இந்த மூன்றும் மொத்தமாக ஒழிந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது, அப்படி முடியாவிட்டால் குறைந்தபட்சம் திரையுலக ஆதிக்கம் மீண்டும் தமிழ்நாட்டு அரசியலில் வராமல் பார்த்துகொள்ள வேண்டும்
காரணம் இந்த திமுக அதிமுக இம்சைகள் நெடுங்காலம் தாங்காது, இதில் மறுபடியும் திரையுலகம் கட்டுபாடு அரசியலுக்கு வந்தால் இன்னும் 50 ஆண்டுகள் தமிழ்நாட்டை காக்கமுடியாது, அது வயிற்றுபோக்கில் கிடப்பவனுக்கு காய்ச்சலும் வந்தது போல் தமிழகத்தை தீரா நோயாக்கிவிடும்
இங்கு தேசியம் வளர்வதே நல்லது, அதுதான் அவசிய சிகிச்சையும் கூட..