கலைஞரிடம் ஒருநாள் முதல்வர் பதவி கேட்டீரா?
கலைஞரிடம் ஒரே ஒரு நாள் என்னை முதல்வராக்குங்கள் என்று கேட்டேன். அவர் மட்டும் என்னை முதல்வராக்கியிருந்தால் ஒரே நாளில் போரை நிறுத்தியிருப்பேன் -சீமான்
சரி அங்கிள், இதோ கோத்தபாய வந்துவிட்டார். எங்கே? பழனிச்சாமியிடம் சென்று ஒரே ஒருநாள் இல்லை அரைநாள் என்னை முதல்வராக்குங்கள் ஈழத்தை மீட்டுவிடுகின்றேன் என சொல் பார்க்கலாம்
அன்னார் இப்படி பேசுவது ஆச்சரியமல்ல முன்பு ஒரு இடத்தில் ஐநாவில் என்னை 1 மணிநேரம் பேசவிட்டால் ஈழம் வாங்கிகாட்டுவேன் என்றார், “அப்படியனால் ஈழதமிழர் எல்லாம் ஊமையா? பேச ஆளில்லாமலா 30 வருடம் ஆயுதம் தூக்கி போராடினார்கள்?” என கேட்டால் பதிலே வரவில்லை
அது இருக்கட்டும் , என்னது கலைஞரிடம் ஒருநாள் முதல்வர் பதவி கேட்டீரா?
தன் மகனையே அந்த பதவியில் அரை நாழிகை வைக்க விரும்பாதவர் அவர், அவர் உமக்கு ஒரு நாள் முழுக்க முதல்வர் பதவி தருவாரா?