ஒரு பெண்ணையும் மேலே விடாதீர்கள்
கடந்த வருடம் இது ஐகோர்ட் உத்தரவு என சொல்லி ஐயப்ப பக்தர்களின் மனம் நோகும் வண்ணம் பெண்களை அரும்பாடுபட்டு கடும் காவலுடன் மலையேற்றிய பிணராயி விஜயம் இந்த வருடம் எங்கிருக்கின்றார் என்றே தெரியவில்லை
ஒரு பெண்ணையும் மேலே விடாதீர்கள் என சொல்லிவிட்டு சிகப்பு துண்டை தலையில் போட்டு அமர்ந்துவிட்டார்
ஆண்டுதோறும் கோடிகணக்கான மக்கள் சபரிமலைக்கு செல்கின்றார்கள் என்றால் சும்மாவா? சரி இந்த அதிசயத்தை அய்யப்பன் யார் மூலம் செய்தார்?
“ஆட்டுக்கு தாடி தேவையில்லை ஆனால் நாட்டுக்கு கவர்ணர் அவசியம் தம்பி..”