சுடலை என்பது தென் மாநில காவல் தெய்வம்

சுடலை என்பது தென் மாநில காவல் தெய்வம், தென் தமிழ்நாடு அவரின் கோட்டை

அவர் பெயர் என்னவென யாருக்கும் தெரியாது, சுடலை எனும் மயானத்தில் இருக்கும் சாமி என்பதால் சுடலை சாமி என்றானார்

சிலர் நினைப்பது போல சிவன் சுடுகாட்டில் பிணத்துக்கு தவமிருப்பது போலவும், சாம்பல் பூசி ஆடவே வந்தது போலவும், சுடலையும் அப்படி ஏதோ பிணத்தினை எதிர்பார்க்கும் பேய் எனவும் நினைத்தால் அது சிற்றறிவு

எல்லோர் வாழ்வும் கர்பத்தில் தொடங்கி மயானத்தில் முடிகின்றது, ஒரு மனிதன் வாழ்வினை முடித்து கடவுளில் கலந்துவிடுகின்றான் என்பது இந்து தத்துவம்

ஆம் சிவனில் கலந்துவிடுகின்றான் என்பதைதான் சுடுகாட்டில் சிவன் இருக்கின்றார் ஆடுகின்றார் என்றெல்லாம் சொல்லிவைத்தார்களே தவிர, சிவபெருமான் ஒன்றும் வெட்டியான் அல்ல‌

சுடலைமாடனும் அந்த சாயலே

இன்றும் கொடைவிழாவில் தென்னகத்தில் சுடலை மயானத்திற்கு செல்கின்றார் எனும் தத்துவம் அதுதான்.

மாறாக வேறொன்றுமில்லை மானிட எலும்புகள் அவருக்கு அவசியம் அல்ல‌

எல்லா மனிதனும் கடைசியில் சுடுகாட்டில் சாம்பலாகி வேகாத எலும்புகளாய் முடியபோகின்றவர்கள் எனும் தத்துவத்தை விளக்கவே சாமியின் நள்ளிரவு மயான வேட்டை நடக்கும்

சாமி தனியாகத்தான் சுடுகாட்டுக்கு செல்வார் ஏன்?

அதேதான் என்னதான் ஆடினாலும் ஒருவன் தனியாகத்தான் கடைசியில் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும் எனும் தத்துவம் அது

சுடலை சாமி காவல் தெய்வம் மட்டுமல்ல, மானிட வாழ்வின் தத்துவத்தை விளக்கும் தெய்வமும் கூட‌

சுடலை என்பவர் பேயோடு சுடுகாட்டில் ஆடுவார், பிணத்துக்கு காவல் இருப்பார் என்பதெல்லாம் “ஏ மனிதா என்றாவது ஒருநாள் நீ சுடுகாட்டுக்கு போவாய், அங்கே சுடலை இருப்பார் அதனால் சாவை கண்டு அஞ்சாதே..” என அவனை தைரியபடுத்த கூற பட்ட மொழிகள்

ஆம் நாம் வணங்கும் தெய்வமே சுடுகாட்டில் இருக்கும் பொழுது சாவை கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும் என்ற தைரியம் எல்லோருக்கும் வரும்

அந்த தைரியத்தை ஊட்ட சொன்ன வரிகளே அவையன்றி வேறொன்றுமில்லை

சிவனின் சாயலான சுடலை , புராணங்களில் சிவனின் மகனாக அறியபடுகின்றார். பகவதி அம்மன் இருக்கும் இடமெல்லாம் அவரின் புத்திரனாக அவரும் இருப்பார்

கேரளாவில் அவ்வகையில் குறிப்பாக தென் கேரளாவில் சுடலை சாமிக்கு ஆலயம் அதிகம் அப்படியே குமரி வழியாக நெல்லை தாமிரபரணி வரை எல்லா ஊரிலும் அவரின் ராஜாங்கமே

சுடலை எப்படி இருப்பார் என யாருக்கும் தெரியாது, ஆனால் காவல்காரன் கட்டுமஸ்தான உடலும் கையில் வெட்டரிவாளும் ஏந்தி நிற்பவன் என நம்பிய அக்கால சமூகம் அந்த உருவையே அவருக்கும் கொடுத்துவிட்டது

அவரும் தன்னை நம்பிய மக்களை எல்லாம் காக்கின்றார், தென்னகத்தில் கரண்ட் கம்பம் இல்லா ஊர் இருக்கலாம் ஆனால் சுடலை சாமி இல்லா ஊர் கிடையாது

ஒரு பனை உயரம் கொண்ட ஒத்தபனை சுடலை, மாசான சுடலை எனும் மயான சுடலை, ஊசிகாட்டு சுடலை என பல பெயர்களில் அவர் வருவார்

உஜ்ஜைனி மகா காளி என்பதை உச்சிமா காளி என மாற்றிய தென்னாடு, உஜ்ஜைனி சுடலையினை உச்சி காட்டு சுடலையாக்கியிருக்கலாம்

அந்த சாமி நீதி நெறி தவறாதவர் என்பது நம்பிக்கை. பாதிக்கபட்டவன் யாராயினும் அவரிடம் புகாரளித்தால் அவர் நீதியினை அருள்வார் என்பது நம்பிக்கை

தென்னக சுடலை சாமி ஆலயங்களில் கடாவும் கோழியும் சிலர் பன்றியுமாக வெட்டுவார்கள், பன்னெடுங்காலத்தில் அதாவது பைபிளின் பழைய ஏற்பாடு உள்ளிட்ட பல வரலாறுகள் குறிக்கும் பலி கொடுத்தலின் அடையாளமாக அது தொடர்ந்து வரலாம்

வெட்டுவார்களே தவிர அதை உண்பதெல்லாம் மக்கள்தான், சாமியா உண்ணும்? இல்லை

ஆனால் சர்க்கரை பொங்கலில் திருப்தி அடையும் சுடலையும் உண்டு, பக்தனின் பக்தியே அந்த சாமிக்கு முக்கியம்

சுடலை என்பவர் தென்னாடுடைய சிவனின் உக்கிரமான வடிவம், கால பைரவரின் சாயல். சுடுகாட்டில் ஆடும் சிவனின் தத்துவ வடிவம்

தன்னை நம்பும் பக்தர்களை எக்காலமும் காக்கும் தெய்வம், நீதி இருக்குமிடத்தில் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக சட்டென வரமளும் தெய்வம்

ஒருமுறை ஜெயலலிதா ஆடுகோழி கோவிலில் வெட்ட தடை எனும்போழுது முதன் முதலில் அவரை எச்சரித்தது தென்னக சுடலையே, அதன் பின் ஜெயலலிதா அத்தடையினை விலக்கினார்.

அந்த மகா சக்திவாந்த தெய்வத்தை, தென்னகத்தின் அய்யனை, சிவபெருமானின் தத்துவத்தை தயவு செய்து துண்டு சீட்டில் தடுமாறும் ஒருவருக்கு சூட்டாதீர்கள்

மீறி அவரை கலாய்க்க இவரை இழுத்தால் “இந்த துண்டு சீட்டு காரனையா”” என் பெயரில் அழைத்தாய் என கோபமாய் வரும் சாமி உங்களை துண்டு துண்டாக்கிவிடும், கவனமாக இருங்கள்..

அதற்கு மேலும் சொல்வதாக இருந்தால் சுடலை என்றால் சுடுகாடு, மயானம் என சொல்லிவிட்டு சொல்லுங்கள் அது பொருத்தமாக இருக்கும் சாமியும் கோபபடாது..