சபரிமலைக்கு வெள்ளைக்காரர்களும் விரதமிருந்து வர தொடங்கியிருக்கின்றார்கள்
சபரிமலைக்கு வெள்ளைக்காரர்களும் விரதமிருந்து வர தொடங்கியிருக்கின்றார்கள்
ஆம், இப்பொழுதெல்லாம் மேற்குலகில் மற்றும் வெள்ளையர் குடியேறிய பூமியான நியூசிலாந்து ஆஸ்திரேலியாவில் சர்ச்ச்க்கு செல்வதற்கு யாருமில்லை, கூட்டம் குறைந்து சில சர்ச்களை விற்றே விட்டார்கள்
ஒருவிஷயம் மகா காமெடி
ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்து கிறிஸ்தவம் போதிக்கபட்ட காலங்கள் மாறி, இப்பொழுதெல்லாம் இங்கிருந்து அதாவது ஆசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு ஊழியம் செய்ய செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது
எவன் கிறிஸ்துவத்தை சொல்லி கொடுத்தானோ அவனுக்கே திரும்ப சொல்லிகொடுக்கின்றார்கள்
ஏன் அப்படி ஆகிவிட்டது நிலை?
ஐரோப்பியர் தேடுவதில் நிறைவடையாதவர்கள், இக்கால தலைமுறை நிறைய கேள்விகளை கேட்கின்றது, அவர்களின் வாழ்க்கை முறையும் இன்னும் பலவும் அவர்களை மனசோர்வு முதல் பல விஷயங்களுக்கு தள்ளுகின்றன
அவர்களுக்கான பதிலும் நிறைவும் கிறிஸ்துவத்தில் இல்லை என சொல்லிவிட்டு இந்துமதம் நோக்கி ஓடும் கூட்டம் அதிகரிக்கின்றது
தங்களின் ஞானம் மற்றும் ஆத்ம தேடலுக்கு இந்துமதம் நிறைவினை கொடுப்பதாக நம்புகின்றார்கள்
அவனவன் விஞ்ஞானத்திலும் , உலக வாழ்க்கையின் உச்சத்தை தொட்டபின்னும் ஆன்மீகம் தேடி இந்துமதம் வருகின்றான்

இதோ அப்படி சபரிமலைக்கும் வந்துவிட்டார்கள்
இங்கிருக்கும் பதர்களோ அம்மதத்தின் மகத்துவம் தெரியாமல் பிதற்றிகொண்டிருக்கின்றன
விரைவில் இந்திய ஆலயமெல்லாம் வெள்ளையரால் நிரம்ப கூடும், அவர்கள் இங்கு சமஸ்கிருதம் முதல் வேதங்களும் படிக்க வரகூடும்
சரி அப்படியானால் ஐரோப்பாவில் சர்ச்சுகள் என்னாகும்? அதெல்லாம் இனி இங்கிருப்பவர்கள் சென்று முழங்குவதற்காக காலியாகும்
ஐரோப்பா ஒருகாலத்தில் உலகின் பழமையான மதத்தை ஏற்கும் என ஜோதிட வித்வான் நாஸ்ட்ரடாமஸ் சொன்னது நிறைவேறுவதை கண்முன் காட்டுகின்றது காலம்
சபரிமலை அய்யப்பன் எங்கிருந்தெல்லாம் பக்தர்களை இழுக்கின்றான் கண்டீர்களா? வருடா வருடம் கோடிகணக்கான பக்தர்கள் செல்கின்றார்கள் என்றால் காரணம் இல்லாமல் இருக்குமா?
சாமியே சரணம் அய்யப்பா…
(சபரிமலைக்கு செல்ல இட ஒதுக்கீடு, சமூக நீதி என எதுவும் கிடையாது. உலகில் எங்கிருந்து எந்த ஆண்களும் குறிப்பிட்ட தகுதியுடைய பெண்களும் வரலாம்)