பிரிட்டன் ராணிக்கு பெருந்தன்மையும் நியாயமு நாகரீகமும் தெரிந்திருகின்றது
இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு ஏகபட்ட பிள்ளைகள் அதில் டயானாவின் கணவர் சார்லஸ் மட்டும் நமக்கு தெரியும், முக ஸ்டாலின் போல சதா நித்தியகால இளவரசராக இருந்தார் ஆனால் ஸ்டாலின் தலைவராகிவிட்டார் சார்லஸ்க்கு இன்னும் நேரம் வரவில்லை
அந்த சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ, அன்னார் ராஜகுடும்பம் என்பதால் ஏகபட்ட நண்பர்கள் உண்டு, அவர்களுடன் ஆட்டம் பாட்டமெல்லாம் உண்டு
அதில் சிலர் இவரை இழுத்துபோட்டு அமெரிக்காவில் பெரும் குற்றங்களை புரிந்திருக்கின்றனர், அவனை இழுத்தால் அவன் இளவரசரை கைகாட்டுவான், பிரிட்டிஷ் இளவரசை கைது செய்ய சில கட்டுபாடுகளும் இழுபறிகளும் உண்டு என்பதால் அவன் தப்பிவிடுவான்
இதை எப்படி கையாள்வது என திகைத்த அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எப்.பி.ஐ மூலம் ஆதாரத்தோடு பிரிட்டன் ராணியிடம் போட்டு கொடுத்துவிட்டது
ராணி மகனை அழைத்து நாட்டாமை படத்து விஜயகுமாராக தீர்ப்பு சொல்லி அவரை குடும்பத்தை விட்டு தள்ளிவைத்து ராஜகுடும்பத்தில் இருந்து விலக்கி சாதாரண மனிதர் என அமெரிக்காவிடமே ஒப்படைத்துவிட்டார்
அன்னார் இனி அமெரிக்க சட்டபடி தண்டிக்கபடுவார்
உலகையே ஆண்ட சாம்ராஜயத்தின் வாரிசினை ராணி குற்றத்துக்காக தண்டித்து அனுப்புகின்றார், அவர் நினைத்தால் காப்பாற்றலாம் ஆனால் நீதியினை செய்கின்றார்
உலகையே கட்டி ஆண்ட சாம்ராயத்தின் ராணி அப்படி
உலகபந்தில் ஊசி வைத்து குத்தினால் தெரியகூடிய பகுதி, அதில் ஒரு ராஜா இருந்தார். ராஜா என்று கூட சொல்லமுடியாது முக்காலியில் அமர்ந்திருந்தார் 4 வது காலாக யாராவது தாங்குவார்கள்
அவரின் பிள்ளைகள் எத்தனை கொலை செய்தாலும் அசரமாட்டார், பிள்ளைகள் திகாரில் இருந்தாலும் பார்த்து உருகி உருகி அழுவார்
பிரிட்டன் ராணிக்கு பெருந்தன்மையும் நியாயமு நாகரீகமும் தெரிந்திருகின்றது
ஆக பிரிட்டன் ராணி தங்கபதக்கம் சிவாஜி போல இருக்கின்றார் தமிழகத்து ராஜா பாபநாசம் கமலஹாசன் போல

இருந்திருக்கின்றார்