மூலபத்திர விவகாரத்துக்கு எப்படி பதில் பார்த்தீர்களா?
ஆபாசமும் அசிங்கமும் திமுகவின் அரசியல் கொள்கைகள், மூலபத்திர விவகாரத்துக்கு எப்படி பதில் பார்த்தீர்களா?
இதுதான் திராவிட நாகரீகம், ஆசான் பெரியாரின் அறிவு தீபம், அண்ணாவின் பகுத்தறிவு
இவர்கள் சொல்லும் வார்த்தையில் அசிங்கமும் ஆபாசமும் தவிர அர்த்தம் கொஞ்சமேனும் உண்டா?
இப்பொழுது முரசொலி நிலத்தில் பங்கு யார் கேட்டார்கள்?
எவனாவது முரசொலி நிலத்தில் பங்கு எனக்கு வேண்டும் என்றால் நீ கலைஞரின் வாரிசா என கேட்பதில் அர்த்தம் உண்டு, ஆனால் அப்படியா கேட்டார்கள்?
மாறாக தமிழ்நாட்டை திருத்த வந்த, தமிழகத்துக்கே வழிகாட்ட வந்த புரட்சி பத்திரிகை என ஒன்று 70 ஆண்டுகளாக நடக்கும் பொழுது, அது அரசியல் பத்திரிகையானபின்பு அதன் உண்மை தன்மை பற்றி கேள்வி வரத்தான் செய்யும்
திருகுவளையில் இருக்கும் கருணாநிதி வீடுபற்றி கேட்டார்களா, இல்லை கோபாலபுரத்தின் கதவுகள் பற்றி கேட்டார்களா?
இல்லை
மாறாக அரசியல் என எல்லோரையும் கிழித்து தொங்கவிடும் ஒரு பத்திரிகை, தான் சொல்வதே தமிழருக்கான உண்மை என சொல்லும் பத்திரிகையின் உண்மைதன்மை பற்றி கேட்டால் அது தவறா?
திமுக என்றால் எக்காலமும் எல்லோரும் ஏன் முகம் சுழிக்கின்றார்கள் என்றால் எப்படி ராமசந்திரனும் ஜெயாவும் பெரும் சக்தியாக எழும்பினார்கள் என்றால் இப்படித்தான்
முரசொலி நிலத்தில் பங்கு வேண்டும் என்பதற்கும், நிலம் உன்னுடையதா இல்லையா என்பதற்கும் வித்தியாசமில்லையா
திமுகவின் நியாயம் அவர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய நெஞ்சுக்கு நீதி..
