விஷயம் இல்லாமல் இல்லை
இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவத்தை குவிக்கும் சிங்கள அரசை இந்தியா கண்டிக்க வேண்டும் : முக ஸ்டாலின்
நம்புகின்றீர்களோ இல்லையோ, மொத்த தமிழ்நாடும், ஏன் உலகவாழ் தமிழரும் “நீங்களெல்லாம் ..ச்சீ.. இப்படியுமா அரசியல்…” என காரி உமிழும் சந்தர்ப்பத்தை அவரே உருவாக்கி கொடுக்கின்றார்
ஆம் 2009ல் இதே இலங்கை ராணுவம் பெரும் போரை நிகழ்த்தி தமிழரை கொன்றொழித்தபோது மத்திய அரசில் வசமாக ஒட்டிகொண்டிருந்த கட்சி திமுக
அரைமணி நேர உண்ணாவிரம், தமிழர் சிங்களுருடன் நீக்கு போக்காக நடக்க வேண்டும், இலங்கை பிரச்சினையினை அவர்களே தீர்க்க வேண்டும் என இன்னும் என்னனென்னமோ சொல்லிகொண்டிருந்தது திமுக
2009ஐ அடுத்து ராஜபக்சேயும் மைத்திரிபாலாவும் ஆண்ட 9 ஆண்டுகளில் பொத்திகொண்டிருந்ததது திமுக, ஜெகத்ரட்சகனின் கொழும்பு முதலிடு மட்டும் 28 ஆயிரம் கோடி, மாறன் பிரதர்ஸின் பிசினஸ் தனி, அவர்களின் கிரிக்கெட் அணியில் சிங்கள வீரர்களும் உண்டு
இப்பொழுது கோத்தபாயா கடும் இறுக்கத்தில் இறங்குகின்றார், ஆம் ஈஸ்டர் தாக்குதல் அவர்களுக்கு கரும்புள்ளி
நாடு முழுக்க, அதாவது இலங்கை முழுக்க பாதுகாப்பு காவல்துறையிடம் இருந்து ராணுவத்துக்கு மாற்றபட்டிருக்கின்றது
இது தமிழர், சிங்களர், முஸ்லீம் என எல்லா தரப்பிலும் ராணுவத்தை குவிக்க வழிசெய்திருக்கின்றது, தமிழர்க்கு மட்டும் அல்ல
ஆக அவர்கள் அவர்கள் நாட்டில் பாதுகாப்பினை வலுபடுத்தினால் திமுகவுக்கு ஏன் குத்துகின்றது?
விஷயம் இல்லாமல் இல்லை
அந்த மைதிதிரிபால அமெரிக்க சார்பு ஆசாமி, பல முதலீடுகளை இழுத்தார் அதில் திமுகவும் ஜெகத்ரட்சகம் மூலம் முதலீடு செய்தது
கோத்தபாய வந்த வேகத்தில் ஆடுகின்றார், இதில் திமுகவின் முதலீடும் பாதிக்கபடும், அதில் அந்த சர்வாதிகாரி இதோ குதிக்கின்றார்
இலங்கை ராணுவம் தமிழரை கொல்லும்பொழுது திமுக மகா அமைதி காக்கவும், இப்பொழுது நாடு முழுக்க அவர்கள் ராணுவத்தை பலபடுத்தும் பொழுது திமுக பொங்கவும் இதுதான் காரணம்
தமிழர் சாகும் பொழுது அமைதிகாப்பார்களாம் ஏனெனில் இவர்களிடம் டெல்லியில் ஆட்சிபங்கு இருந்ததாம்
ஆம் அப்பொழுது ஆட்சியில் இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் தலையிட மாட்டார்களாம்..
ஆனால் இலங்கை முழுக்க பாதுகாப்பு பலபடுத்தினால் பொங்குவார்களாம் காரணம் டெல்லியில் ஆட்சி இல்லை மேலும் திமுக முதலீடு கொழும்பில் உண்டு
இப்பொழுது மறுபடியும் தொடக்கத்தில் இருந்து இரண்டாம் வரியினை படியுங்கள், நீங்களும் அதனையே சொல்வீர்கள்..