நித்திசாமியினை முடக்கி தீருவது என முடிவெடுத்துவிட்டார்கள்
நித்திசாமியினை முடக்கி தீருவது என முடிவெடுத்துவிட்டார்கள், சாமியும் அதற்கேற்ற சந்தர்பங்களை தானே உருவாக்குகின்றார்
சாமிக்கும் மத்திய அரசுக்குமான உரசல் இரு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும், அறிக்கைகள் அதைத்தான் சொல்கின்றன
சாமியின் பாஸ்போர்ட் 2018க்கு பின் புதுப்பிக்கபடவில்லை, சாமி நேபாளம் வழியாக டோபாக்கோ தீவுக்கு சென்று அங்கிருந்து தன் சாணலை நடத்துவது, சீட கோடிகளை களமிறக்குவது என பல காரியங்களை செய்திருக்கின்றார்
நித்தி சாமி நல்லவரா இல்லையா என்பது விஷயமல்ல, சாமி இதுவரை நீதிமன்றத்தால் தண்டிக்கபடவில்லை எந்த பெண்ணும் சாமி மேல் குற்றம் சாட்டவுமில்லை
ஆனால் சாமி அரசியல்வாதிகளுடனா மோதலில் ஏன் சிக்குகின்றார் என்பதுதான் தெரியவில்லை, இந்தியாவில் காரணங்களின்றி எதுவும் அமையாது
சாமி அரசியலில் சில சக்திகளை கையில் எடுத்திருக்க கூடும் அது தெரிந்த எதிர்கட்சி தொடக்கத்திலே அதை முடக்க களமிறங்கலாம்
சுவாமி அரசியல் தன் கட்டுபாட்டில் வர முயற்சிப்பதே எல்லா சிக்கலுக்கும் காரணம், இதை முதலில் உணர்ந்து போட்டு சாத்தியது ஜெயா , திமுகவுக்கு சாமி ஒரு இந்து சாமி என்பது சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழிந்த இன்பம்
இப்பொழுது கன்னடத்திலும் ஏதோ அரசியலில் கை வைத்திருக்கின்றது, மோப்பம் பிடித்த அரசுகள் இனி அவரை விடுவதில்லை என போட்டு சாத்த கிளம்பிவிட்டன
நிச்சயம் நித்தியிடம் ஏதோ சக்தி இருக்கின்றது இல்லாவிட்டால் இவ்வளவு நாள் இப்படி ஒரு கூட்டத்தை கட்டிமேய்க்க முடியாது, ஆனால் தன் எல்லை தாண்டுகின்றாரோ என்பதுதான் சந்தேகம்
சாமி ஏதோ பெரிய தொடர்பில் பெரும் திட்டமிட்டிருக்கின்றார், அதை தெரிந்த அரசு இனி விடுவதில்லை என் முடிவு செய்திருக்கின்றது
ஒவ்வொருருக்கும் ஆண்டவன் ஒரு வட்டம் போடுவான், சிலருக்கு சிறிய வட்டம், சிலருக்கு பெரிய வட்டம்
எந்த கொம்பனும் அதை தாண்டமுடியாது, மாறாக அதை அழித்து பெரிதாக்குவேன் என கிளம்பினால் வட்டம் போட்ட ஆண்டவன் மட்டம் தட்டிவிடுவான்.
சுவாமி மேல் இனி ஜப்பானில் ஓம் ஷிரிக்யோ அமைப்பின் தலைவர் சாமி சோகொ அகாரா மேல் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது போல நடவடிக்கை எடுக்கலாம்
ஜப்பான் சாமி என்ன செய்தது?


ஜப்பான் சாமி இந்துமதம் புத்தமதம் கலந்த ஒரு மார்க்கத்தை போதித்தது, எப்பொழுதும் வேலை பிசி என ஓடிய ஜப்பானியர்களுக்கு அது தியானம் தீர்த்தம் என கொடுத்து ஆசுவாசபடுத்த அவர்கள் அவரை கடவுளாக்கினார்கள்
சாமி பெரும் சாமியானது, பெரும் ஆசிரமும் சீட கோடிகளுமாக ஏகபட்ட பணம் கொட்டியது
ஒரு கட்டத்தில் சாமி ஜப்பானை ஆள ஆசைபட்டது, அமெரிக்கா ஜப்பானை கைபற்றவருவதாகவும் அணுகுண்டு வீசபோபவதாகவும் தானே அதை தடுத்து ஜப்பானை ஆளபோவதாகவும் களமிறங்கிற்று
ஜப்பான் அரசுக்கு எதிராக யுத்த பிரகடணம் செய்தது, பின் சீரியசாக ஆயுதங்களை வாங்கி குவித்தது ஜப்பானியர் பலரை கொல்ல ஆரம்பித்து அரசை வம்புக்கு இழுத்தது
ஏகபட்ட குழப்பமும் சாவுகளும் நடக்க சுதாரித்த ஜப்பானிய அரசு ராணுவத்தை அனுப்பி சாமியினை பிடித்து தூக்கில் போட்டு கடந்தவருடம் கொன்றது
ஜப்பான் சாமியும் ஆன்மீகம் மூலம் ஆட்சி பிடித்து அமெரிக்காவினை ஒழித்து உலகை மீட்பேன் என்னை நம்புங்கள் என சீடகோடிகளுடன் களமிறங்கினார்
நித்திசாமியின் கோஷ்டிகள் சாமி ஒருவராலே ஆன்மீக அரசியல் சாத்தியம் என்றும், தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல்மாற்றம் அவரால் நிகழும் என்றே போதிக்க தொடங்கியிருக்கின்றன
நிச்சயம் நித்திசாமி ஏதோ ஒரு யோகபயிற்சியில் சித்தி பெற்றவர், அவர் தன் வழிகாட்டியாக ரமணர் , விவேகானந்தர் போன்றோரை கொண்டிருக்கலாம் அப்படி செய்யவில்லை
மாறாக ஓஷோ இல்லை அவரையும் மீறி ஜப்பானிய சாமியினை குருவாக கொண்டிருப்பாரோ என்னமோ, நடக்கும் காட்சிகளை கண்டால் ஜப்பானிய சாமியார் போலத்தான் மர்மமாக சென்றுகொண்டிருப்பார் போல
சாமி ஏதோ அரசியல் ஆட்டம் ஆடி தனக்கான வட்டத்தில் இருந்து வெளியே வந்திருக்கின்றா, நண்டு கொழுத்தால் வளையில் தங்காது
அதற்காக வெளிவரும் நண்டை பருந்து விட்டுவிடுமா என்ன?