பாஜக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பணம் பெற்றிருப்பதாக ஒரு சிலருக்கு ஏக மகிழ்ச்சி
பாஜக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் பணம் பெற்றிருப்பதாக ஒரு சிலருக்கு ஏக மகிழ்ச்சி
ஒரு அரசை சிக்கலில் இழுத்துவிட எதிரி நாடுகள், தீவிரவாத கூட்டம் ஏகபட்ட சதி செய்யும்,
கோடிகணக்கான தொண்டர்கள் சிலர் விவரமின்றி அதில் சிலர் சிக்குவார்கள்
இந்தியாவுக்கு இது புதிதா என்றால் இல்லை
ராஜிவ் கொலைகாரன் சிவராசனே சென்னையில் காங்கிரசாருக்கு 2 லட்சம் நன்கொடை கொடுத்திருந்தான், அதில்தான் அவனால் திருபெரும்புதூர் கூட்டத்தில் ஊடுருவமுடிந்தது
நமக்கெல்லாம் திருப்பெரும்புதூர் கூட்டத்தில் ஹரிபாபு எடுத்த படமான சிவராசன், நளினி இன்னும் சிலதான் தெரியும் ஆனால் காங்கிரஸ் புள்ளிகளுடன் சிவராசன் எடுத்தபடமும் உண்டு
ஒரு வீடியோவும் உண்டு
ஆனால் எம்.கே நாராயணனும் ராஜிவ் புலனாய்வு குழுவும் அதை மறைத்தன, ஆம் அவை வெளியிடபட்டால் தேவையற்ற சிக்கல்கள் வரும், புலிகள் செய்திருந்த ஒருவகை தந்திரம் என்பது புரிந்தது
அதனால் மறைக்கவேண்டியதை மறைத்தார்கள், செய்யவேண்டியதை செய்தார்கள்
புலிகளின் அதே தந்திரத்தை பாகிஸ்தான் அரசும் தாவுத் கோஷ்டியும் செய்திருக்கலாம், மற்றபடி மோடியும் அமித்ஷாவும் தாவுத்தை சந்தித்து பெட்டியோடு வரவில்லை
