துக்ளக்கில் சோ ராமசாமியின் வாரிசு நான் என வந்திருகின்றார் குருமூர்த்தி

கருணாநிதிக்கு வாரிசு முக ஸ்டாலின் என்பது போல துக்ளக்கில் சோ ராமசாமியின் வாரிசு நான் என வந்திருகின்றார் குருமூர்த்தி

அதைதவிர ஒன்றுமில்லை

பெரும் ஞான மகான்கள், தனிபிறவிகள் முடியும் பொழுது அவர்கள் நடத்திய விஷயங்களை அப்படியே விட்டுவிடுவதுதான் அவர்களுக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது

அண்ணாவுக்கு பின் திமுக கலைக்கபட்டிருக்க வேண்டும், குறைந்தபட்சம் ராமசந்திரனுக்கு பின் அதிமுக கலைக்கபட்டிருக்க வேண்டும்

அப்படித்தான் கலைஞருக்கு பின் முரசொலி மூடபட்டிருக்க வேண்டும், சோவுக்கு பின் துக்ளக்கும் நிறுத்தபட்டிருக்க வேண்டும்

அதுதான் அவர்களுக்கான மரியாதை

மாறாக அவர்கள் தொடங்கியது என்பதற்காக கொஞ்சமும் பொருந்தாதோரை வைத்திருப்பது பணம் சம்பாதிக்க உதவுமே அன்றி மற்றபடி அந்த பெரும் ஞானஸ்தர்களுக்கு பெரும் அவமானமாகும்.

இவ்விஷயத்தில் பாரதி, ஜெயகாந்தன், சுஜாதா, கண்ணதாசன் போன்றோர் கொடுத்து வைத்தவர்கள், அவர்கள் புகழை கெடுக்க யாரும் வாரிசு என வரவில்லை.