பாலில் கலக்கும் ஆபத்தான விஷயங்கள்
தமிழ்நாட்டில் பெரும் புயலாக கிளம்பும் என எதிர்பார்த்த விவகாரம் பாலில் கலக்கும் ஆபத்தான விஷயங்கள், ஆனால் வழக்கமாக எல்லா விஷயங்களையும் கடக்கும் தமிழகம் அதையும் கடந்துவிட்டது
விவசாயமே செய்ய கூடாது ஆனால் காய்கறி விலை அரிசி விலை உயர கூடாது, வெங்காய விவசாயமே செய்ய கூடாது ஆனால் விலை உயர கூடாது என உயர்ந்த கொள்கையுள்ள தமிழகம் இப்பொழுதும் அப்படி மாடே வளர்க்க கூடாது ஆனால் சுத்தமான பால் வேண்டும் என எதிர்பார்க்கின்றது
அது எப்படி சாத்தியமாகும்
உயர்சாதி பசுக்கள் கொடுக்கும் பால் விஷம் என்பதெல்லாம் சரியல்ல, எல்லா நாட்டுக்காரனும் அதை குடித்து ஆஜானுபாகுவாக காட்சியளிக்கின்றான்
சிக்கல் பாலில் இருந்து வெண்ணெய் எடுத்துவிட்டு பின் அது நீர்த்து போனபின் அதில் கலக்கும் ரசாயாணங்களில் இருக்கின்றது
சும்ம்மாவே கறந்து சொசைட்டிக்கு வரும் பாலில் தண்ணீர் கலப்பு அதிகம், சொசைட்டி ஊழியர் திருப்பணியில் இன்னும் அதிகம்
இதில் எடுக்க வேண்டிய வெண்ணெய் எல்லாம் எடுக்க மீதி இருப்பது வெறும் நீர், அதில்தான் புகுந்துவிளையாடி கண்டதையும் சேர்த்து என்னவோ செய்து பாலை விஷமாக்குகின்றார்கள்
உற்பத்தி மிக குறைவு மக்கள் தொகை மிக அதிகம்
பின் எப்படி ஆகும் இப்படித்தான் ஆகும்.
இதற்கு வட இந்தியவர்கள் பரவாயில்லை அவர்கள் அதிகம் படிக்காதவர்கள், திராவிட கோஷ்டியினை பொறுத்தவரை பான்பராக் மற்று பசு மூத்திர கோஷ்டிகள்
ஆனால் சுத்தமான பாலும் வெண்ணையும் நெய்யும் அவனுக்குத்தான் கிடைக்கின்றது, அதிகம் படித்த திராவிடம் கலப்பு பாலில் புற்றுநோய் முதல் கண்ட நோயிலும் சாகின்றது
இந்த விஷயத்தில் அவன் சரியாகத்தான் இருக்கின்றான்
இந்த விஷயத்தை திமுக கையில் எடுத்தது பின்பு பசுபாதுகாப்பு போன்ற விஷயங்களை நோக்கி அது நகர்வது போல் தெரிந்ததால் சட்டென்று கீழே எறிந்துவிட்டு மகராஷ்ட்ரம் இலங்கை என அது கத்த தொடங்கிவிட்டது